Singers : P. Jayachandran and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Paavai malar mottu
Ilam paruvamoo eerettu
Paadum vanna sittu
Ondru tharava kannam thottu
Thevai innum ennaennavoo
Thedi kolla sugamo sugam

Male : Paavai malar mottu
Ilam paruvamoo eerettu

Female : Aasai varum mella mella thaan
Acham varum solla solla thaan
Paedhai manam thavikkum innum thaan
Bodhai vandhu inikkum ennam thaan
Thevai innum ennaennavoo
Thedi kolla sugamo sugam

Male : Paavai malar mottu
Ilam paruvamoo eerettu

Male : Palliyarai padam sollava
Andha vithai ellaam kattru kollavaa
Un methai yilae vandhu konjava
Un maeni engum mutham sindhava
Thevai innum ennaennavoo
Thedi kolla sugamo sugam

Female : Thottu thottu alli kollathaan
Thogaikingu nenjil vetkam thaan
Male : Vetkapattu aagathamma
Anbu thollai adhu theeradhamma
Thevai innum ennaennavoo

Male : Thedi kolla sugamo sugam
Thedi kolla sugamo sugam

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பாவை மலர் மொட்டு
இளம் பருவமோ ஈரெட்டு
பாடும் வண்ணச் சிட்டு
ஒன்று தரவா கன்னம் தொட்டு
தேவை இன்னும் என்னென்னவோ
தேடிக் கொள்ள சுகமோ சுகம்……

ஆண் : பாவை மலர் மொட்டு
இளம் பருவமோ ஈரெட்டு

பெண் : ஆசை வரும் மெல்ல மெல்லத்தான்
அச்சம் வரும் சொல்ல சொல்லத்தான்
பேதை மனம் தவிக்கும் இன்னும்தான்
போதை வந்து இனிக்கும் எண்ணம்தான்
தேவை இன்னும் என்னென்னவோ
தேடிக் கொள்ள சுகமோ சுகம்……

ஆண் : பாவை மலர் மொட்டு
இளம் பருவமோ ஈரெட்டு

ஆண் : பள்ளியறை பாடம் சொல்லவா
அந்த வித்தை எல்லாம் கற்றுக் கொள்ளவா
உன் மெத்தை வந்து கொஞ்சவா
உன் மேனி எங்கும் முத்தம் சிந்தவா…..
தேவை இன்னும் என்னென்னவோ
தேடிக் கொள்ள சுகமோ சுகம்……

பெண் : தொட்டுத் தொட்டு அள்ளிக் கொள்ளத்தான்
தோகைக்கிங்கு நெஞ்சில் வெட்கம்தான்
ஆண் : வெட்கப்பட்டு ஆகாதம்மா
அன்புத் தொல்லை அது தீராதம்மா
தேவை இன்னும் என்னென்னவோ

ஆண் : தேடிக் கொள்ள சுகமோ சுகம்……
தேடிக் கொள்ள சுகமோ சுகம்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here