Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Male : Paavaiyargal maan polae kaaviriyin neer polae
Paavaiyargal maan polae kaaviriyin neer polae
Vaazhum vagai vaazhnthaalae devathaikku mel aagum
Naagarega kolam enna kolamaagumo
Male : Paavaiyargal maan polae kaaviriyin neer polae
Male : Vaari vittu pinnaal podungal
Vaasamulla poovai soodungal….poovai soodungal
Aa….aa…aa…aa…aa…aaa….
Ponnagaiyilum udaiyilum azhagillai pennae
Un nagaiyilum nadaiyilum sugam undu kannae
Padiththu padiththu uraiththa thamizhai padiththidungal
Male : Paavaiyargal maan polae kaaviriyin neer polae
Paavaiyargal maan polae kaaviriyin neer polae
Female : Nallathor penmani kaattilum vaazhalaam
Thaasiyin veettilum nermaiyaai vaazhalaam
Naan thannai unarntha mangai
Naan punitham niraintha gangai
Enai thiruththa enakku yaarum thevaiyillai
Female : Nallathor penmani kaattilum vaazhalaam…..
Male : Pattu selai kattum pothae
Maanam kaaval nirkkum
Pottum poovum vaikkum pothae
Dheivam thedi varum
Adhuthaan neengalaa sariyaai sollungal
Male : Pattu selai kattum pothae
Maanam kaaval nirkkum
Female : Dheivam ingae vanthaal kooda
Ennai saerththu kollum
Kaalam pogum pokkai paarththu
Konjam maara sollum
Sariyaai paarungal illaiyael kelungal
Dheivam ingae vanthaal kooda
Ennai saerththu kollum
Male : Nilam paarththu nadappaalae
Andraiya kaalaththu pengal
Mugam paarththu sirikkindraal
Indraiya kaalaththu pengal
Pompala sirippenna pugaiyila virippenna
Male : Pattu selai kattum pothae
Maanam kaaval nirkkum
Female : Kurai yaedhum irunthaalae
Sollungal thiruththikolven
Unnidaththil kurai irunthaal
Naan adhai eduththu solven
Aangalum pengalum sarisamamaagumandro
Both : Engum undu edhilum undu
Nanmai theemaigalae
Vaazhumpothu edhaiyo solvom
Yaarum nanpargalae ulagai arivom
Ondraai inaivom
Engum undu edhilum undu
Nanmai theemaigalae….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே
பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே
வாழும் வகை வாழ்ந்தாலே தேவதைக்கு மேல் ஆகும்
நாகரீக கோலம் என்ன கோலமாகுமோ
பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே
ஆண் : வாரி விட்டு பின்னல் போடுங்கள்
வாசமுள்ள பூவை சூடுங்கள்……பூவை சூடுங்கள்…..
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ……ஆஆ…….
பொன்னகையிலும் உடையிலும் அழகில்லை பெண்ணே..
உன் நகையிலும் நடையிலும் சுகம் உண்டு கண்ணே..
படித்து படித்து உரைத்த தமிழை படித்திடுங்கள்……
ஆண் : பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே
பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே
பெண் : நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம்
தாசியின் வீட்டிலும் நேர்மையாய் வாழலாம்
நான் தன்னை உணர்ந்த மங்கை
நான் புனிதம் நிறைந்த கங்கை
எனை திருத்த எனக்கு யாரும் தேவையில்லை
பெண் : நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம்………
ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே
மானம் காவல் நிற்கும்
பொட்டும் பூவூம் வைக்கும் போதே
தெய்வம் தேடி வரும்
அதுதான் நீங்களா சரியாய் சொல்லுங்கள்
ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே
மானம் காவல் நிற்கும்
பெண் : தெய்வம் இங்கே வந்தால் கூட
என்னை சேர்த்துக் கொள்ளும்
காலம் போகும் போக்கை பார்த்து
கொஞ்சம் மாறச் சொல்லும்
சரியாய் பாருங்கள் இல்லையேல் கேளுங்கள்
தெய்வம் இங்கே வந்தால் கூட
என்னை சேர்த்துக் கொள்ளும்
ஆண் : நிலம் பார்த்து நடப்பாளே
அன்றைய காலத்து பெண்கள்
முகம் பார்த்து சிரிக்கின்றாள்
இன்றைய காலத்து பெண்கள்
பொம்பள சிரிப்பென்ன புகையில விரிப்பென்ன
ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே மானம் காவல் நிற்கும்
பெண் : குறை ஏதும் இருந்தாலே
சொல்லுங்கள் திருத்திக்கொள்வேன்
உன்னிடத்தில் குறை இருந்தால்
நான் அதை எடுத்துக் சொல்வேன்
ஆண்களும் பெண்களும் சரிசமமாகுமன்றோ
இருவர் : எங்கும் உண்டு எதிலும் உண்டு
நண்மை தீமைகளே………
வாழும் போது எதையோ சொல்வோம்
யாரும் நண்பர்களே உலகை அறிவோம்
ஒன்றாய் இணைவோம்………
எங்கும் உண்டு எதிலும் உண்டு
நன்மை தீமைகளே………