Singers : Vani Jairam and B. S. Sasireka

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Paavam seiyyungal idhiloru
Paththiram vaangungal
Paavam seiyyungal idhiloru
Paththiram vaangungal

Female : Kaalam ungalai mannippathandri
Kadavulum mannippaar
Kaalam ungalai mannippathandri
Kadavulum mannippaar

Female : Pudhu paavamum seiyya anumathi tharuvaar
Palanai ennippaar
Pudhu paavamum seiyya anumathi tharuvaar
Palanai ennippaar

Female : Porkaasugal enthan pettiyalittu
Paavam pannippaar
Porkaasugal enthan pettiyalittu
Paavam pannippaar

Female : Paavam seiyyungal idhiloru
Paththiram vaangungal

Female : Paavaththukithuvaa parikaaram
Intha paavikku idharkkaa adhikaaram
Paavaththukithuvaa parikaaram
Intha paavikku idharkkaa adhikaaram

Female : Aabaththil varuvor thoodhar
Avarai kaasukku virkindraan
Ivan paavaththai vidavum kodiyavan
Aanaal paathaiyil nirkindraan

Female : Madhavazhipaadu manitharkalaalae
Manitharukkaanathandro
Idhil madhagurumaargal tharagarkal aavathu
Maaberum paavamandro

Female : Madhavazhipaadu manitharkalaalae
Manitharukkaanathandro
Idhil madhagurumaargal tharagarkal aavathu
Maaberum paavamandro

Female : Namakkum melae oruvan irukkum
Nampikkai enakkundu
Avan nammai aalbavan karththan avanukku
Vaarisu yaar undu

Female : Adhisaya vedham bible namathu
Arivukku ettiyathae
Idhil mathagurumaargal aadhikkam seivathu
Mamathaiyai kaattuvathae

Female : Saaththiram thannai kaasukku vittravan
Thavarae seithuvittaan
Antha naaththigan athanai saathagamaakki
Nammai thoottri vittaan

Female : Saaththiram thannai kaasukku vittravan
Thavarae seithuvittaan
Antha naaththigan athanai saathagamaakki
Nammai thoottri vittaan

Female : Mathagurumaarkal suyanalam ellaam
Maranthu valarnthavargakal
Avar arivai pazhippor christhuvar allar
Arivai izhanthavargal

Female : Naraga pisaasu martinlootharai
Naadu kadaththungal
Avar naattai kedukka ezhuthiyirukkum
Yaettai koluththungal

Female : Mathaguru aanaiyithu
Intha martin aanaiyithu
Avanathu noolai koluththungal
Avarathu aanaiyai koluththungal

Female : Kuttram puriya thoondum noolagalao
Muttrum koluththungal
Bilble mattum neengida mattra
Paapaththai koluththungal….

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றிம் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பாவம் செய்யுங்கள் இதிலொரு
பத்திரம் வாங்குங்கள்
பாவம் செய்யுங்கள் இதிலொரு
பத்திரம் வாங்குங்கள்

பெண் : காலம் உங்களை மன்னிப்பதன்றி
கடவுளும் மன்னிப்பார்
காலம் உங்களை மன்னிப்பதன்றி
கடவுளும் மன்னிப்பார்

பெண் : புது பாவமும் செய்ய அனுமதி தருவார்
பலனை எண்ணிப் பார்
புது பாவமும் செய்ய அனுமதி தருவார்
பலனை எண்ணிப் பார்

பெண் : பொற்காசுகள் எந்தன் பெட்டியிலிட்டு
பாவம் பண்ணிப் பார்
பொற்காசுகள் எந்தன் பெட்டியிலிட்டு
பாவம் பண்ணிப் பார்

பெண் : பாவம் செய்யுங்கள்
பத்திரம் வாங்குங்கள்

பெண் : பாவத்துக்கிதுவா பரிகாரம்
இந்த பாவிக்கு இதற்கா அதிகாரம்
பாவத்துக்கிதுவா பரிகாரம்
இந்த பாவிக்கு இதற்கா அதிகாரம்

பெண் : ஆபத்தில் வருவோர் தூதர்
அவரை காசுக்கு விற்கின்றான்
இவன் பாவத்தை விடவும் கொடியவன்
ஆனால் பாதையில் நிற்கின்றான்

பெண் : மதவழிப்பாடு மனிதர்களாலே
மனிதருக்கானதன்றோ
இதில் மதகுருமார்கள் தரகர்கள் ஆவது
மாபெரும் பாவமன்றோ…..

பெண் : மதவழிப்பாடு மனிதர்களாலே
மனிதருக்கானதன்றோ
இதில் மதகுருமார்கள் தரகர்கள் ஆவது
மாபெரும் பாவமன்றோ….

பெண் : நமக்கும் மேலே ஒருவன் இருக்கும்
நம்பிக்கை எனக்குண்டு
அவன் நம்மை ஆள்பவன் கர்த்தன் அவனுக்கு
வாரிசு யார் உண்டு

பெண் : அதிசய வேதம் பைபிள் நமது
அறிவுக்கு எட்டியதே
இதில் மதகுருமார்கள் ஆதிக்கம் செய்வது
மமதையை காட்டுவதே….

பெண் : சாத்திரம் தன்னை காசுக்கு விற்றவன்
தவறே செய்து விட்டான்
அந்த நாத்திகன் அதனை சாதகமாக்கி
நம்மை தூற்றி விட்டான்

பெண் : சாத்திரம் தன்னை காசுக்கு விற்றவன்
தவறே செய்து விட்டான்
அந்த நாத்திகன் அதனை சாதகமாக்கி
நம்மை தூற்றி விட்டான்

பெண் : மதகுருமார்கள் சுயநலம் எல்லாம்
மறந்து வளர்ந்தவர்கள்
அவர் அறிவை பழிப்போர் கிருஸ்துவர் அல்லர்
அறிவை இழந்தவர்கள்

பெண் : நரகப் பிசாசு மார்ட்டீன்லூதரை
நாடு கடத்துங்கள்
அவர் நாட்டைக் கெடுக்க எழுதியிருக்கும்
ஏட்டைக் கொளுத்துங்கள்

பெண் : மதகுரு ஆணையிது…….
இந்த மார்ட்டீன் ஆணையிது……….
அவனது நூலைக் கொளுத்துங்கள்…..
அவரது ஆணையைக் கொளுத்துங்கள்……..

பெண் : குற்றம் புரிய தூண்டும் நூல்களை
முற்றும் கொளுத்துங்கள்………..
பைபிள் மட்டும் நீங்கிட மற்ற
பாபத்தைக் கொளுத்துங்கள்………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here