Paayatha Kanal Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by T. M. Soundarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. M. Soundarajan
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Paayatha kanal paaya kavanendhi
Vilaiyadum kalaiyiname..aee
Kaayatha kanal paaya kavanendhi
Vilaiyadum kalaiyiname..aee
Theiyaadha nilavu pol deiveegha
Oli veesum kalai selvamae
Thaayadhi maamanai kandathu pol
Pun muruval seidhaalum
Thalai saayadha maan nalla jaadhi maan
Thulli paayadha maan..aa..aa..aa
Saayadha maan..Female : Ohoo
Male : Nalla jaadhi maan
Female : Appadiya
Male : Thulli paayadha maan
Thalai saayadha maan ..paayadha maan
Male : Kaanal vanamaai sezhithaalum
Thulli paayaadha maan
Karpanai kettaadha oru arpudha pudhumaiyodu
Kavanathil aayalotti kanni paruvam nirandhadhum
Paayadha maan …thulli paayadha maan
Male : Kanaiyil padadha nilaiyilae
Mei kaadhal ulaavum valaiyilae
Kanaiyil padadha nilaiyilae
Mei kaadhal ulaavum valaiyilae
Ulam kaniyavae manam magizhavae
Than dhinathai maranthu vanathil vasithu varum
Paayadha maan ..thulli paayadha maan
Male : Kaavana medhinil theeviramaaga
Kaaval purindhidum sundhara maan
Kalavai sandhana kadhambavaadai
Kamalum azhagiya yevvana maan
Male : Kangana kanakanavendru muzhanga
Sadhangai kulungum suthanthira maan
Kalangaadhu ….uuu aaaaa aa haaa aa
Kalangaadhu kanaiyai kandu mayangaadhu
Kalangaadhu kanaiyai kandu mayangaadhu
Manamum thayangaadhu maraindhu padhungaadhu
Madhiyum thavaradhu edhaiyum madhiyadhu
Anudhinamum thinai kaaval purindhaalum
Amudha kalai thavazhalum nilai
Kumudha malar ezhil vadhanam
Vadadha maan
Vandhadundo undhan paarvaiyilae
Undhan paarvaiyilae
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : பாயாத கனல் பாய கவனேந்தி
விளையாடும் கலையினமே
தேயாத நிலவு போல் தெய்வீக
ஒளி வீசும் கலைச்செல்வமே…..
தாயாதி மாமனை கண்டதுபோல்
புன்முறுவல் செய்தாலும்
தலை சாயாத மான் நல்ல ஜாதி மான்…
துள்ளிப் பாயாத மான் தலை சாயாத மான்
பாயாத மான்
பெண் : ஓஹோ
ஆண் : துள்ளிப் பாயாத மான்
பெண் : அப்படியா
ஆண் : துள்ளிப் பாயாத மான் ஆ….ஆ…..ஆ….
சாயாத மான்
ஆண் : கானல் வனமாக செழித்தாலும்
துள்ளிப் பாயாத மான்
கற்பனைக் கெட்டாத ஒரு அற்புத புதுமையோடு
காவனத்தில் ஆயலோட்டி கன்னிப் பருவம் நிறைந்தும்
பாயாத மான் துள்ளிப் பாயாத மான்
ஆண் : கணையில் படாத நிலையிலே
மெய்க் காதல் உலாவும் வலையிலே
கணையில் படாத நிலையிலே
மெய்க் காதல் உலாவும் வலையிலே
உளம் கனியவே மனம் மகிழவே
தன் தினத்தை மறந்து வனத்தில் வசித்து வரும்
பாயாத மான் துள்ளிப் பாயாத மான்…..
ஆண் : காவன மீதினில் தீவிரமாகவே
காவல் புரிந்திடும் சுந்தர மான்
கலவைச் சந்தன கதம்பவாடை
கமழும் அழகிய யௌவன மான்
ஆண் : கங்கண கணகணவென்று முழங்க
சதங்கை குலுங்கும் சுதந்திர மான்
கலங்காது…ஹா…ஆஅ.ஆஅ.ஆஅ
கலங்காது கணையைக் கண்டு மயங்காது
கலங்காது கணையைக் கண்டு மயங்காது
மனமும் தயங்காது மறைந்து பதுங்காது
மதியும் தவறாது எதையும் மதியாது
அனுதினமும் தினைக் காவல் புரிந்தாலும்
அமுதக் கலை தவழும் நிலை
குமுத மலர் எழில் வதனம்
வாடாத மான் வந்ததுண்டோ
உந்தன் பார்வையிலே….உந்தன் பார்வையிலே….!