Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Pachai ilai polae pattu sirakaalae
Aagaayam sellum paravaigalae
Pachai ilai polae pattu sirakaalae
Aagaayam sellum paravaigalae

Female : Uchchi varai paranthu bhoomiyai maranthu
Oorvalam nadanthidum azhagugalae
Uchchi varai paranthu bhoomiyai maranthu
Oorvalam nadanthidum azhagugalae

Female : Achcham enpathillaiyae
Aasai kondathillaiyae
Endrum ungal vaazhvil
Viduthalaiyae

Female : Pachai ilai polae pattu sirakaalae
Aagaayam sellum paravaigalae

Female : Paadhaiyil medu pallangal
Paadhai polae ullangal
Paadhaiyil medu pallangal
Paadhai polae ullangal
Paasam kolvor ungalaipolae
Bhoomiyil undo sollungal

Female : Sattam enbathillaiyae
Thittam enbathillaiyae
Endrum ungal geetham viduthalaiyae

Female : Pachai ilai polae pattu sirakaalae
Aagaayam sellum paravaigalae

Female : Bhoomiyai konjam paarungal
Saamiyidaththil kelungal
Bhoomiyai konjam paarungal
Saamiyidaththil kelungal

Female : Yaezhai pennai nenjil edukkum
Nallavar undaa sollungal
Yaezhai pennai nenjil edukkum
Nallavar undaa sollungal

Female : Kadhal enbathennavo
Paasam enbathennvo
Kandum kollum
Neram varavillaiyae

Female : Pachai ilai polae pattu sirakaalae
Aagaayam sellum paravaigalae

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே
ஆகாயம் செல்லும் பறவைகளே
பச்சை இலை போலே பட்டு சிறகாலே
ஆகாயம் செல்லும் பறவைகளே

பெண் : உச்சி வரை பறந்து பூமியை மறந்து
ஊர்வலம் நடத்திடும் அழகுகளே
உச்சி வரை பறந்து பூமியை மறந்து
ஊர்வலம் நடத்திடும் அழகுகளே

பெண் : அச்சம் என்பதில்லையே
ஆசை கொண்டதில்லையே
என்றும் உங்கள் வாழ்வில்
விடுதலையே…

பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே
ஆகாயம் செல்லும் பறவைகளே

பெண் : பாதையில் மேடு பள்ளங்கள்
பாதை போலே உள்ளங்கள்
பாதையில் மேடு பள்ளங்கள்
பாதை போலே உள்ளங்கள்
பாசம் கொள்வோர் உங்களைப்போலே
பூமியில் உண்டா சொல்லுங்கள்

பெண் : சட்டம் என்பதில்லையே
திட்டம் என்பதில்லையே
என்றும் உங்கள் கீதம் விடுதலையே

பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே
ஆகாயம் செல்லும் பறவைகளே

பெண் : பூமியை கொஞ்சம் பாருங்கள்
சாமியிடத்தில் கேளுங்கள்
பூமியை கொஞ்சம் பாருங்கள்
சாமியிடத்தில் கேளுங்கள்

பெண் : ஏழை பெண்ணை நெஞ்சில் எடுக்கும்
நல்லவர் உண்டா சொல்லுங்கள்
ஏழை பெண்ணை நெஞ்சில் எடுக்கும்
நல்லவர் உண்டா சொல்லுங்கள்

பெண் : காதல் என்பதென்னவோ
பாசம் என்பதென்னவோ
கண்டும் கொள்ளும்
நேரம் வரவில்லையே

பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே
ஆகாயம் செல்லும் பறவைகளே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here