Singers : Vani Jayaram and L. R. Anjali

Music by : M. S. Vishwanathan

Female : Padhi madhi nadhi podhu manisadai
Naadhar aruliya kumaraesa
Paagu kanimozhi maadhu kuramagal
Paadham varudiya mana vaazha

Female : Padhi madhi nadhi podhu manisadai
Naadhar aruliya kumaraesa
Paagu kanimozhi maadhu kuramagal
Paadham varudiya mana vaazha

Female : {Kaadhum oru vizhi kaaga mura
Arul maayan harithiru marugonae
Kaalan enai anugaamal
Unathiru kaalil vazhipada arulvaayae} (2)
Muruga arulvaayae

Female : Aadhi ayanodu thevar surar
Ulagaalum vagaiyuru siraimeelaa
Aadum mayilinil yaeri amarargal
Soozha varavarum ilaiyonae

Female : Soodha migavalar solai maruvu
Swaamimalai thanil uraivonae
Sooran udal ara vaari suvarida
Vaelai vidavala perumaalae

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பாதி மதி நதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

பெண் : பாதி மதி நதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

பெண் : {காதும் ஒரு விழி காகமுற
அருள் மாயன் அரிதிரு மருகோனே
காலன் எனை அணுகாமல்
உனதிரு காலில் வழிபட அருள்வாயே} (2)
முருகா அருள்வாயே….

பெண் : ஆதி அயனொடு தேவர் சுரர்
உலகாளும் வகையுறு சிறை மீளா
ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே

பெண் : சூத மிகவளர் சோலை மருவு
சுவாமிமலை தனில் உறைவோனே
சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here