Singer : Saibaba and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male : ………………

Female : Padi padi vaazhkkaiyilae eththanai padi
Padipadiyaa munneera vazhigal eppadi
Padi padi vaazhkkaiyilae eththanai padi
Padipadiyaa munneera vazhigal eppadi

Male : Appadi ippadi aadaamae
Seppadi viththa kaattaamae
Appadi ippadi aadaamae
Seppadi viththa kaattaamae
Naama eppadi vaazhvathungo
Both : Naama eppadi vaazhvathungo
Naama eppadi vaazhvathungo

Both : Padi padi vaazhkkaiyilae eththanai padi
Padipadiyaa munneera vazhigal eppadi

Female : Ullapadiyae nallapadiyaai paadupadonum
Dhinam urupadiyaa varumpadiyai thedi vaikkonum
Male : Kandapadi varumpadiyai selavu pannaathae
Oru kadankaaran vaasappadiyai mithikka vidaathae

Female : Padi padi vaazhkkaiyilae eththanai padi
Padipadiyaa munneera vazhigal eppadi

Male : ………………..

Female : Sattapadiyum thittapadiyum irukanum naadu
Silar ishttappadiyae nadanthathanaal vilainthathu kedu
Male : Kularupadi kularupadi seiyyaraaru
Indru uruppadiyaa thirunthumpadi vanthathu yaaru

Female : Padi padi vaazhkkaiyilae eththanai padi
Padipadiyaa munneera vazhigal eppadi

Male : ………………..

பாடகர்கள் : சாய்பாபா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : ……………………….

பெண் : படி படி வாழ்க்கையிலே எத்தனை படி
படிப்படியா முன்னேற வழிகள் எப்படி
படி படி வாழ்க்கையிலே எத்தனை படி
படிப்படியா முன்னேற வழிகள் எப்படி

ஆண் : அப்படி இப்படி ஆடாமே
செப்படி வித்த காட்டாமே
அப்படி இப்படி ஆடாமே
செப்படி வித்த காட்டாமே
எப்படி வாழ்வதுங்கோ
நாம எப்படி வாழ்வதுங்கோ
இருவர் : எப்படி வாழ்வதுங்கோ
நாம எப்படி வாழ்வதுங்கோ

இருவர் : படி படி வாழ்க்கையிலே எத்தனை படி
படிப்படியா முன்னேற வழிகள் எப்படி

பெண் : உள்ளபடியே நல்லபடியாய் பாடுபடோணும்
தினம் உருப்படியா வரும்படியை தேடி வைக்கோணும்
ஆண் : கண்டபடி வரும்படியை செலவு பண்ணாதே
ஒரு கடன்காரன் வாசப்படியை மிதிக்க விடாதே

பெண் : படி படி வாழ்க்கையிலே எத்தனை படி
படிப்படியா முன்னேற வழிகள் எப்படி

ஆண் : ……………………………..

பெண் : சட்டப்படியும் திட்டப்படியும் இருக்கணும் நாடு
சிலர் இஷட்டப்படியே நடந்ததனால் விளைந்தது கேடு
ஆண் : குளறுபடி குளறுபடி செய்யறாரு
இன்று உருப்படியா திருந்தும்படி வந்தது யாரு

பெண் : படி படி வாழ்க்கையிலே எத்தனை படி
படிப்படியா முன்னேற வழிகள் எப்படி

ஆண் : ……………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here