Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Female : Pagalilae oru nilavinai kandaen adhu karuppu nilaa
Pagalilae oru nilavinai kandaen adhu karuppu nilaa
Adhu ulavum enthan manam oru vaanam poongaavanam
Pudhu megam ival thegam adhil mothum dhinam palavitha sugam tharum

Female : Pagalilae oru nilavinai kandaen adhu karuppu nilaa

Female : Serum kaalam thedi thegam sinthu paadum
Devan vanthu sera thevai solla koosum
Tholil ondru kooda sogam mella odum
Melam thaalam poda mogam melum koodum

Female : Angangal unthan sontham inabam sinthum anbusangam
Paadal ondrai paadum neram paavai ennam vaaduthae
Maara vendum kadhal paaram maalai ondru malaradi vizhunthida

Female : Pagalilae oru nilavinai kandaen adhu karuppu nilaa

Female : …………………

Female : Kaattril aadum koondhal kadhal solli aada
Kadhal konda kaaman kaigal vanthu kooda
Thegam endra kovil poojai neram theda
Thaagam mogam paada thaalam raagam paada

Female : Yaedhetho ennam vanthu solli solli ennai killi
Yaettrum inbam kodi kodi yaekkam thannai kaattuthae
Kaattrum ennai koodi koodu kadhal enum kanavugal kalanthida

Female : Pagalilae…ae…ae…ae…yaeh….
Pagalilae oru nilavinai kandaen adhu karuppu nilaa
Adhu ulavum enthan manam oru vaanam poongaavanam
Pudhu megam ival thegam adhil mothum dhinam palavitha sugam tharum

Female : Pagalilae oru nilavinai kandaen adhu karuppu nilaa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

பெண் : பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்

பெண் : பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

பெண் : சேரும் காலம் தேடி தேகம் சிந்து பாடும்
தேவன் வந்து சேர தேவை சொல்லக் கூசும்
தோளில் ஒன்று கூட சோகம் மெல்ல ஓடும்
மேளம் தாளம் போட மோகம் மேலும் கூடும்

பெண் : அங்கங்கள் உந்தன் சொந்தம் இன்பம் சிந்தும் அன்புசங்கம்
பாடல் ஒன்றைப் பாடும் நேரம் பாவை எண்ணம் வாடுதே
மாற வேண்டும் காதல் பாரம் மாலை ஒன்று மலரடி விழுந்திட

பெண் : பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா….

பெண் : ………………….

பெண் : காற்றில் ஆடும் கூந்தல் காதல் சொல்லி ஆட
காதல் கொண்ட காமன் கைகள் வந்து கூட
தேகம் என்ற கோவில் பூஜை நேரம் தேட
தாகம் மோகம் பாட தாளம் ராகம் பாட

பெண் : ஏதேதோ எண்ணம் வந்து சொல்லிச்சொல்லி என்னை கிள்ளி
ஏற்றும் இன்பம் கோடி கோடி ஏக்கம் தன்னை காட்டுதே
காற்றும் என்னை கூடி கூடி காதல் எனும் கனவுகள் கலந்திட

பெண் : பகலிலே….ஏ…ஏ….ஏ…..ஏஹ்……
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்

பெண் : பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here