Singer : T. M. Soundarajan

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Male : Paithiyakaran pathum solvaan
Pogattum vittu vidu
Paithiyakaran pathum solvaan
Pogattum vittu vidu
Padaithavan iruppaan paarthu kolvaan
Payanathai thodarnthu vidu
Nee payanathai thodarnthu vidu

Male : Paithiyakaran pathum solvaan
Pogattum vittu vidu

Male : Aindhu viralgalum ondraai irukkum
Manadhin ulagil kedaipaana
Athanai perukkum nallavanaaga
Aandavan kooda iruppaana

Male : Ulaiyin vaaiyai moodum kaigal
Oorin vaayai moodiduma
Alaigal ooindhu neeraduvadhu
Aaga koodiya kaariyama

Male : Paithiyakaran pathum solvaan
Pogattum vittu vidu

Male : Narambilladha naavaal edhaiyum
Varambillamal kooriduvaar
Irundhal varuvaar izhandhaal pirivaar
Naalukku naal thaan maariduvaar

Male : Kaaitha maram thaan kalladi padumena
Kan koodaai naam paarthathundu
Buthan yaesu gandhiyai kooda
Kutham solli kettathundu
Buthan yaesu gandhiyai kooda
Kutham solli kettathundu

Male : Paithiyakaran pathum solvaan
Pogattum vittu vidu
Padaithavan iruppaan paarthu kolvaan
Payanathai thodarnthu vidu
Nee payanathai thodarnthu vidu

Male : Humming…..

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்
போகட்டும் விட்டு விடு
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்
போகட்டும் விட்டு விடு
படைத்தவன் இருப்பான் பார்த்துக் கொள்வான்
பயணத்தை தொடந்து விடு…
நீ பயணத்தை தொடந்து விடு…

ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்
போகட்டும் விட்டு விடு

ஆண் : ஐந்து விரல்களும் ஒன்றாய் இருக்கும்
மனிதன் உலகில் கிடைப்பானா
அத்தனை பேர்க்கும் நல்லவனாக
ஆண்டவன் கூட இருப்பானா

ஆண் : உலையின் வாயை மூடும் கைகள்
ஊரின் வாயை மூடிடுமா
அலைகள் ஓய்ந்து நீராடுவது
ஆகக் கூடிய காரியமா….

ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்
போகட்டும் விட்டு விடு

ஆண் : நரம்பில்லாத நாவால் எதையும்
வரம்பில்லாமல் கூறிடுவார்
இருந்தால் வருவார் இழந்தால் பிரிவார்
நாளுக்கு நாள் தான் மாறிடுவார்

ஆண் : காய்த்த மரம்தான் கல்லடி படுமென
கண்கூடாய் நாம் பார்த்ததுண்டு
புத்தன் இயேசு காந்தியைக் கூட
குத்தம் சொல்லிக் கேட்டதுண்டு…..
புத்தன் இயேசு காந்தியைக் கூட
குத்தம் சொல்லிக் கேட்டதுண்டு…..

ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்
போகட்டும் விட்டு விடு
படைத்தவன் இருப்பான் பார்த்துக் கொள்வான்
பயணத்தை தொடந்து விடு…
நீ பயணத்தை தொடந்து விடு…

ஆண் : முனங்கல் ………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here