Singer : P. Susheela
Music by : Master Venu
Lyrics by : Udumalai Narayanakavi
Female : Aa..aa..aa..aaa…aa..aa..aa..aaa..
Thaaleloo thaleloo thaleloo thaleloo
Pala kaalam vedhanai thaan
nilaiyaanadhalla
Vizhi moodi idhu velai thuyilaai en kannae
Thuyilae en kannae
Pala kaalam vedhanai thaan
nilaiyaanadhalla
Female : Thaaneendra sei pol nan eendra unnai
Thalatti seeratti valarthaal periyannai
Maanae en mayilae en magan endra vaaithaan
Maanae en mayilae en magan endra vaaithaan
Maranthaalum per anbai maranthiduma mananthaan
Female : Vizhi moodi idhu velai thuyilaai en kannae
Thaaleloo thaleloo thaleloo thaleloo
Female : Sathveegam illadha periyorgal seyalai
Sagiyaadhu manam vaadi naliyaadha maganae
Thaneerin alaiyodu alai modhinaalum
Thaneerin alaiyodu alai modhinaalum
Thaanondru seraamal pogathennaalum
Female : Pala kaalam vedhanai thaan
nilaiyaanadhalla
Thaaleloo thaleloo thaleloo thaleloo
Mmmmm..mmmm..mmmmm..
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி
பெண் : ஆஆஆஆ…ஆஆஆஆ…
தாலேலோ தாலேலோ…தாலேலோ தாலேலோ…
பல காலம் வேதனைதான் நிலையானதல்ல
விழி மூடி இது வேளை துயிலாய் என் கண்ணே
துயிலாய் என் கண்ணே
பல காலம் வேதனைதான் நிலையானதல்ல
பெண் : தானீன்ற சேய்போல் நானீன்ற உன்னைத்
தாலாட்டிச் சீராட்டி வளர்த்தாள் பெரியன்னை
மானே என் மயிலே என் மகனென்ற வாய்தான்
மானே என் மயிலே என் மகனென்ற வாய்தான்
மறந்தாலும் பேரன்பை மறந்திடுமோ மனந்தான்
பெண் : விழி மூடி இது வேளை துயிலாய் என் கண்ணே.
தாலேலோ தாலேலோ…தாலேலோ தாலேலோ…
பெண் : சாத்வீகமில்லாத பெரியோர்கள் செயலை
சகியாது மனம் வாடி நலியாதே மகனே
தண்ணீரின் அலையோடு அலை மோதினாலும்
தண்ணீரின் அலையோடு அலை மோதினாலும்
தானொன்று சேராமல் போகாதென்னாளும்….
பெண் : பல காலம் வேதனைதான் நிலையானதல்ல
தாலேலோ தாலேலோ…தாலேலோ தாலேலோ.
ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…..