Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Pala kodi selvaththa pala perkku podhuvaakkum
Mahalatchumi uruvaththil vantha
En arumai lottery seettu dheivangalae
Dheepam yaeththuraen soodam kaatturaen
Dhenamum nadaththuraen poojai

Male : Paavam theerkkavae parisum vaangavae
Thaviyaa thavikkuthu ennaasai
Vaangum sampalattha vachchu
Kudumbangala thaanga mudiyala saami
Yaengum nilamaigala eduththu ozhichchu vittu
Enakku nalla vazhi kaami enakku nalla vazhi kaami

Male : Om maharashtra punjab
Assam haryana bihar
Bengal andhra MP naagaa karanataka
Puducherryudan tamilnadu

Male : Seettu vadivaththilae sernthu irukkum
Enthan note-u saamigalae
Chinna ottu veettukkullae
Ondi kudithanamaa maattiyirukkum enakku
Magizhchchi thara maatteengalo
Magizhchchi thara maatteengalo

Male : Om nepal bhutan mehalayaa
Neegalaavathu paaraayo
Ongalukku irukkum vasathiyilae
Oru sila latcham perusum illa
Ongalai nambum indha adiyaenukku
Udane pitchai ida venumaiyyaa

Male : Naan arinjum ariyaamalum
Therinthum theriyaamalum seitha
Sagalavidhamaana kuttrangalaiyum
Poruththu kaaththu ratchikka venum
Om namo lottery seettu maathaakkalae
Saamigalae om shanthi om shanthi om shanthi

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : பல கோடி செல்வத்த பலபேர்க்கு பொதுவாக்கும்
மகாலட்சுமி உருவத்தில் வந்த
என் அருமை லாட்டரி சீட்டு தெய்வங்களே
தீபம் ஏத்துறேன் சூடம் காட்டுறேன்
தெனமும் நடத்துறேன் பூஜை

ஆண் : பாவம் தீர்க்கவே பரிசும் வாங்கவே
தவியாத் தவிக்குது என்னாசை
வாங்கும் சம்பளத்த வச்சு
குடும்பங்கள தாங்க முடியல சாமி….
ஏங்கும் நிலைமைகள எடுத்து ஒழிச்சு விட்டு
எனக்கு நல்ல வழி காமி எனக்கு நல்ல வழி காமி

ஆண் : ஓம் மகாராஷ்டிரா பஞ்சாப்
அஸ்ஸாம் ஹரியானா பீகார்
பெங்கால் ஆந்திரா எம்.பி. நாகா கர்நாடகா
புதுச்சேரியுடன் தமிழ் நாடு

ஆண் : சீட்டு வடிவத்திலே சேர்ந்து இருக்கும்
எந்தன் நோட்டு சாமிகளே…
சின்ன ஓட்டு வீட்டுக்குள்ளே
ஒண்டிக் குடித்தனமா மாட்டியிருக்கும் எனக்கு
மகிழ்ச்சி தர மாட்டீங்களோ
மகிழ்ச்சி தர மாட்டீங்களோ…

ஆண் : ஓம் நேப்பால் பூட்டான் மேகாலயா
நீங்களாவது பாருங்களைய்யா
இந்த ஏழைக்கு மனமிரங்கி
ஓ மகாலட்சுமி ஹே..ராஜலட்சுமி காமதேனு

ஆண் : ஒங்கள நம்பி நான் காத்திருக்கேன்
கருணை கண் பாராயோ
ஒங்களுக்கு இருக்கும் வசதியிலே
ஒரு சில லட்சம் பெருசும் இல்ல
ஒங்களை நம்பும் இந்த அடியேனுக்கு
உடனே பிச்சை இட வேணுமய்யா

ஆண் : நான் அறிஞ்சும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் செய்த
சகலவிதமான குற்றங்களையும்
பொறுத்து காத்து ரட்சிக்க வேணும்
ஓம் நமோ லாட்டரி சீட்டு மாதாக்களே
சாமிகளே….ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here