Singers : Unnikrishnan and Chorus

Music by : S. A. Rajkumar

Lyrics by : Kalidasan

Male : Pal abishegam
Chorus : Saamikku
Male : Nei abishegam
Chorus : Saamikku
Male : Malar abishegam
Chorus : Saamikku
Male : Thaen abishegam
Chorus : Saamikku
Male : Sandhana abishegam
Chorus : Saamikku
Male : Avulum malarum
Chorus : Saamikku
Male : Muthina thaenga
Chorus : Saamikku
Male : Karpoora deepam
Chorus : Saamikku
Male : Kaani ponnum
Chorus : Saamikku
Male : Ellaam ellaam
Chorus : Saamikku

Male : {Thannan naadhinam
Thannan naadhinam
Saranam ayyappaa
Chorus : Saranam ayyappaa} (2)

Male : Vizhiyaavum oliyaana
Guruve en swami
Unai paadum uyir nadham
Saranam ayyappaa

Male : Vazhiyaavum thuniayaaga
Varugindra saashthaan
Manamae un malar peedam
Saranam ayyappaa

Male : Sutha sudar maniyae
Chorus : Ayyappaa
Male : Bakthi pasunganiyae
Chorus : Ayyappaa
Male : Nitha pournamiyae
Chorus : Ayyappaa
Male : Sithak kulirpaniyae
Chorus : Ayyappaa
{Saranam ayyappaa
Swami ayyappaa} (2)

Male : {Thannan naadhinam
Thannan naadhinam
Saranam ayyappaa
Chorus : Saranam ayyappaa} (2)

Male : Aayiram kodi
Sooriyan koodi
Sergindra thaethi
Magarama jothi

Male : Deepathai thaangum
Thiriyinai pola
Ayyanai sumanthen
Anbu nenjaalae

Male : Moolamum enna naanariyen
Chorus : Swami ayyappaa
Male : Mudivugal enna naanariyen
Chorus : Swami ayyappaa

Male : Vazhkindra vazhvu
Ondru mattum
Ayyappan arulena nangariven
Arulvizhi malarmugam
Adhu endhan manasugam
Isai enum ezhu swaram
Enakadhu pugal tharum
Manikanda mandhiram
Ulagil nirandharam

Chorus : {Swami ayyappaa
Saranam ayyappaa} (2)

Male : {Thannan naadhinam
Thannan naadhinam
Saranam ayyappaa
Chorus : Saranam ayyappaa} (2)

Male : Harihara sudhanae
Arulmigu thavamae
Nanthanan avane aavaan

Chorus : Swami pon ayyappa
Saranam pon ayyappa

Male : Kaniyuru mugamae
Piniyoru karamae
Kaliyuga varamae vaa vaa

Chorus : Swami pon ayyappa
Saranam pon ayyappa

Male : Bakthi thamarai
Muthi thaenthuli
Thiththippagiyadhae
Siththathaal athan
Piththathaal dhinam
Kaththi kooviyathae

Chorus : {Saami dhindhakathom
Ayyappa dhindhakathom} (2)

Male : Vinil illaadha
Vinai aruthiruvae
Mannil unnaadaana
Manikanda guruvae

Chorus : Swamiyae …
Saranam ayyappaa

Male : Sndai kottavudan
Singi thatta
Adhu andham thottu
Bagirandhaa mutta undhan
Anbu mottuvida
Thunbam vittuvida
Innum kattupada
Inban vattamida
Siva siva saivamum
Hari hari vainavam
Ivai ini valamvarum
Azhagiya thiruthalam
Oru malaiyae
Guru malaiyae arivaai
Adhai adainthaal thuyarillayae
Podhuvaai
Sivan maganae
Thiru oliyaai varuvaai
Pari sudhanae
Anuthinamum
Arul tharuvaai…

Chorus : Swamiye …
Saranam ayyappaa
Swamiyappa ayyappa
Saranam appa ayyappaa
Pandhala raja ayyappaa
Pambha vaasaa ayyyappaa
Swamiye ayyappo
Ayyappo swamiye
Swamiye …
Saranam ayyappaa

Male : Thannan naadhinam
Thannan naadhinam
Saranam ayyappaa
Saranam ayyappaa

பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடல் ஆசிரியர் : காளிதாசன்

ஆண் : பால் அபிஷேகம்
குழு : ஸ்வாமிக்கே
ஆண் : நெய் அபிஷேகம்
குழு : ஸ்வாமிக்கே
ஆண் : மலர் அபிஷேகம்
குழு : ஸ்வாமிக்கே
ஆண் : தேன் அபிஷேகம்
குழு : ஸ்வாமிக்கே
ஆண் : சந்தன அபிஷேகம்
குழு : ஸ்வாமிக்கே
ஆண் : அவுலும் மலரும்
குழு : ஸ்வாமிக்கே
ஆண் : முத்திரை தேங்காய்
குழு : ஸ்வாமிக்கே
ஆண் : கற்பூர தீபம்
குழு : ஸ்வாமிக்கே
ஆண் : காணிப் பொன்னும்
குழு : ஸ்வாமிக்கே
ஆண் : எல்லாம் எல்லாம்
குழு : ஸ்வாமிக்கே

ஆண் : {தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா
குழு : சரணம் ஐயப்பா} (2)

ஆண் : விழியாவும் ஒளியான
குருவே என் சுவாமி
உனைப் பாடும் உயிர் நாதம்
சரணம் ஐயப்பா

ஆண் : வழியாவும் துணையாக
வருகின்ற சாஸ்தா
மனமே உன் மலர்ப் பீடம்
சரணம் ஐயப்பா

ஆண் : சுத்தச்சுடர்மணியே
குழு : ஐயப்பா
ஆண் : பக்திப் பசுங்கனியே
குழு : ஐயப்பா
ஆண் : நித்தப் பௌர்ணமியே
குழு : ஐயப்பா
ஆண் : சித்தக்குளிர் பனியே
குழு : ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா

ஆண் : {தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா
குழு : சரணம் ஐயப்பா} (2)

ஆண் :ஆயிரம் கோடி
சூரியன் கூடி
சேர்கின்ற தேதி
மகரமாஜோதி

ஆண் : தீபத்தை தாங்கும்
திரியினைப் போல
ஐயனை சுமந்தேன்
அன்பு நெஞ்சாலே

ஆண் : மூலமும் என்ன நானறியேன்
குழு : சுவாமி ஐயப்பா
ஆண் : முடிவுகள் என்ன நானறியேன்
குழு : சரணம் ஐயப்பா

ஆண் : வாழ்கின்ற வாழ்வு ஒன்று மட்டும்
ஐயப்பன் அருள் என நன்கறிவேன்
அருள்விழி மலர்முகம்
அது எந்தன் மனச்சுகம்
இசையெனும் ஏழுஸ்வரம்
எனக்கது புகழ்தரும்
மணிகண்ட மந்திரம் உலகில் நிரந்தரம்

குழு : சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

ஆண் : {தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா
குழு : சரணம் ஐயப்பா } (2)

ஆண் : ஹரிஹர சுதனே
அருள்மிகு தவமே
நர்த்தன நவமே வா வா
குழு : சுவாமி பொன்னைய்யப்பா
அய்யனே பொன்னையப்பா

ஆண் : கனியுறு முகமே பிணியறு கரமே
கலியுக வரமே வா வா
குழு : சுவாமி பொன்னைய்யப்பா
அய்யனே பொன்னையப்பா

ஆண் : பக்தித்தாமரை முத்தித் தேன் துளி
தித்திப்பாகியதே
சித்ததால் அதன் பித்தத்தால்
தினம் கத்திக்கூவியதே
குழு : சுவாமி திந்தகத்தோம்
ஐயப்ப திந்தகத்தோம்
சுவாமி திந்தகத்தோம்
ஐயப்ப திந்தகத்தோம்

ஆண் : விண்.ணில் இல்லாத
வினையறு திருவே..
மண்ணில் உண்டான
மணிகண்ட குருவே..
குழு : ஸ்வாமியே….ய்
சரணம் ஐயப்பா

ஆண் : செண்டை கொட்ட உடன்
சிங்கி தட்ட அது அண்டம் தொட்டு
பகிரண்ட முட்ட
உந்தன் அன்பு மொட்டு விட
துன்பம் விட்டுவிட
எண்ணம் கட்டுப்பட இன்பம் வட்டமிட
சிவ சிவ சைவமும் ஹரி ஹரி வைணமும்
இரு இனம் வலம் வரும்
அழகிய திருத்தலம்
ஒரு மலையே குரு மலையே அறிவாய்
அதை அறிந்தால் துயர் இல்லயே பொதுவாய்
சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய்
ஹரிசுதனே அனுதினமும் அருள்தருவா..ய்

குழு : ஸ்வாமியே….. ய் சரணம் ஐயப்பா
ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா
பந்தள ராஜா ஐயப்பா பம்பாவாசா ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே
ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே
ஸ்வாமியே….. ய் சரணம் ஐயப்பா

ஆண் : தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here