Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Panpaadum paravaiyae
Enna thookkam
Panpaadum paravaiyae
Enna thookkam
Un pazhangaala kadhai indru
Yaarai thaakkum
Thanneerum rathamum ondru thaanaa
Nee thaayattra kandru pol aagalaamaa

Female : Panpaadum paravaiyae
Enna thookkam
Un pazhangaala kadhai indru
Yaarai thaakkum
Thanneerum rathamum ondru thaanaa
Nee thaayattra kandru pol aagalaamaa

Female : Panpaadum paravaiyae
Enna thookkam

Female : Aandaandu kaalam naam
Aanda naadu
Annai thandhai makkal suttram
Vaazhndha naadu
Aandaandu kaalam naam aanda naadu
Annai thandhai makkal suttram
Vaazhndha naadu
Thondraamal thondrum veerar sondha naadu
Thondraamal thondrum veerar sondha naadu
Thoongi thoongi sorndhu vittadhindha naadu

Female : Panpaadum paravaiyae
Enna thookkam

Female : Adimai vaazhvu paadaminnum
Padikkalaamaa
Nalla amudhamendru nanjai alli kudikkalaama
Adimai vaazhvu paadaminnum
Padikkalaamaa
Nalla amudhamendru nanjai alli kudikkalaama
Thannalathil inbangaana ninaikkalaamaa
Thannalathil inbangaana ninaikkalaamaa
Pettra thaayidathil anbillaamal irukkalaamaa

Female : Panpaadum paravaiyae
Enna thookkam

Female : Pagutharindhu vaazhbavarai
Sarithiram pesum
Avar parambaraiyin kaalgal meedhum
Malargalai veesum
Bayandhu varum adimaigalai
Poonaiyum yaesum
Avan paal kuditha thaayai kooda
Peiyena pesum

Female : Kuditha paalil veeram kalandhu
Koduthaal undhan annai
Kuditha piragum kurudaai irundhaal
Kozhai enbaal unnai
Urimai kuralai uyarthi ingae
Vidudhalai kaana thuditthu vaa
Urangiyadhellaam podhum podhum
Udanae vizhithu ezhundhu vaa
Ezhundhu vaa ezhundhu vaa

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்
பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்
உன் பழங்காலக் கதை இன்று
யாரைக் காக்கும்
தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா
நீ தாயற்ற கன்று போல் ஆகலாமா

பெண் : பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்
உன் பழங்காலக் கதை இன்று
யாரைக் காக்கும்
தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா
நீ தாயற்ற கன்று போல் ஆகலாமா

பெண் : பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்

பெண் : ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம்
வாழ்ந்த நாடு
ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம்
வாழ்ந்த நாடு
தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு
தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு
தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டதிந்த நாடு

பெண் : பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்

பெண் : அடிமை வாழ்வுப் பாடம் இன்னும்
படிக்கலாமா
நல்ல அமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா
அடிமை வாழ்வுப் பாடம் இன்னும்
படிக்கலாமா
நல்ல அமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா
தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா
தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா
பெற்ற தாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா

பெண் : பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்

பெண் : பகுத்தறிந்து வாழ்பவரை
சரித்திரம் பேசும்
அவர் பரம்பரையின் கால்கள் மீதும்
மலர்களை வீசும்
பயந்து வரும் அடிமைகளைப்
பூனையும் ஏசும்
அவன் பால் குடித்த தாயைக் கூட
பேய் எனப் பேசும்

பெண் : குடித்த பாலில் வீரம் கலந்து
கொடுத்தாள் உந்தன் அன்னை
குடித்த பிறகும் குருடாய் இருந்தால்
கோழை என்பாள் உன்னை
உரிமைக் குரலை உயர்த்தி இங்கே
விடுதலை காணத் துடித்து வா
உறங்கியதெல்லாம் போதும் போதும்
உடனே விழித்து எழுந்து வா
எழுந்து வா……எழுந்து வா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here