Singer : P. Leela

Music by : S. V. Venkatraman

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Hmmm mmmm
Arul illarkku avvulagamillai
Porul illarkku ivvulagamillai
Bagavanae kelaiyaa pachondhi ulagilae
Bagavanae kelaiyaa pachondhi ulagilae
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

Female : Padhaviyin aasaiyaalae
Pal perai mosam seidhu
Pagal vesha mainar ellaam
Sugamaaga vaazhndhidavum
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

Female : Uttraarum uravinarum
Vandhu soozhavum
Uyiraana manaivi makkal
Serndhu vaazhavum
Kattraarellaam saattru
Kavigal paadavum
Kakkaa kootangal ellaam
Amaam podavum
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

Female : Jaladhosam pidichavan pol
Thalaiyai kanathidum
Salaesuram kangal pol
Paarvai maaridum

Female : Pazhaiya nilaiyai marandhu
Melae parakka seidhidum
Pazhaiya kanjiyai marandhu
Summa badham geeril neendhidavae
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi
Bagavanae kelaiyaa pachondhi ulagilae
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

பாடகி :  பி. லீலா

இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : ஹ்ம்ம் ..ஹ்ம்ம்..
அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி…….

பெண் : பதவியின் ஆசையாலே
பல பேரை மோசம் செய்து
பகல் வேஷ மைனரெல்லாம்
சுகமாக வாழ்ந்திடவும்
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி……

பெண் : உற்றாரும் உறவினரும் வந்து சூழவும்
உயிரான மனைவி மக்கள் சேர்ந்து வாழவும்
கற்றாரெல்லாம் சாற்றுக் கவிகள் பாடவும்
காக்கா கூட்டங்களெல்லாம் ஆமாம் போடவும்
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி……

பெண் : ஜலதோஷம் பிடிச்சவன் போல்
தலையைக் கனத்திடும்
சாளேசுரம் கண்கள் போல்
பார்வை மாறிடும்..

பெண் : பழைய நிலையை மறந்து
மேலே பறக்கச் செய்திடும்
பழைய கஞ்சியை மறந்து சும்மா
பாதாம்கீரில் நீந்திடவே

பெண் : பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி…….
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here