Singers : T. M. Soundarajan and S. C. Krishnan
Music by : R. Govarthanam
Lyrics by : Kannadasan
Male : Aandavanai padaithavanae aadhi mudhalva
Indha avaniyai aatti veikkum engal iraivaa
Vendiyavarkkarul vazhangum velli uruvaai
En vaedhanaiyaai theerthu vaikka
Odi odi odi varuvaai
Male : Panam naadha inba guna naadha
Appa panam naadha inba guna naadha
Ulagai pambaramaai aatti veikkum arul naadha
Panam naadha inba guna naadha
Ulagai pambaramaai aatti veikkum arul naadha
Male : Appa panam naadha
Male : Vaangi kondu ponavargal tharuvadhillai
Indha vaasal pakkam kooda avar varuvadhillai
Unnai thaekki vaithu kondaalum nimmadhiyillai..ae
Unnai thaekki vaithu kondaalum nimmadhiyillai
Dhinam thedi thedi alaibavarkkum amaidhiyillai
Both : Appa panam naadha inba guna naadha
Appa panam naadha inba guna naadha
Male : Perazhagu pengalaiyum manamudippaai
Petra pillaiyaiyum thandhaiyaiyum pirithu veithaai
Male : Haiyoo
Male : Perazhagu pengalaiyum manamudippaai
Petra pillaiyaiyum thandhaiyaiyum pirithu veithaai
Car yeri rottinilae parakka vaippaai
Silarai kadanaaliyaakki vittu vidai koduppaai
Both : Appa panam naadha inba guna naadha
Appa panam naadha inba guna naadha
Male : Tharkurigal pakkathilae nee irundhaal
Male : Avargal saritheerathu verargalaai maari viduvaai
Male : Indha tharkurigal pakkathilae nee irundhaal
Male : Avargal saritheerathu verargalaai maari viduvaai
Male : Kattrarindha pergalidam illai nee endraal
Kattrarindha pergalidam illai nee endraal
Avar kandhal katti sundalukku kaathu kidappaar
Both : Appa panam naadha inba guna naadha
Ulagai pambaramaai aatti veikkum arul naadha
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆண்டவனைப் படைத்தவனே ஆதி முதல்வா
இந்த அவனியை ஆட்டி வைக்கும் எங்கள் இறைவா
வேண்டியவர்க்கருள் வழங்கும் வெள்ளி உருவாய்
என் வேதனையைத் தீர்த்து வைக்க
ஓடி ஓடி ஓடி வருவாய்….!
ஆண் : பண நாதா இன்பக் குண நாதா
அப்பா பண நாதா இன்பக் குண நாதா
உலகைப் பம்பரமாய் ஆட்டி வைக்கும் அருள் நாதா..
பண நாதா இன்பக் குண நாதா
உலகைப் பம்பரமாய் ஆட்டி வைக்கும் அருள் நாதா.
ஆண் : அப்பா பணம் நாதா
ஆண் : வாங்கிக் கொண்டு போனவர்கள் தருவதில்லை
இந்த வாசல் பக்கம் கூட அவர் வருவதில்லை
உன்னை தேக்கி வைத்துக் கொண்டாலும் நிம்மதியில்லை
உன்னை தேக்கி வைத்துக் கொண்டாலும் நிம்மதியில்லை
தினம் தேடித் தேடி அலைபவர்க்கும் அமைதியில்லை
ஆண்கள் : அப்பா பண நாதா இன்பக் குண நாதா
அப்பா பண நாதா இன்பக் குண நாதா
ஆண் : பேரழகுப் பெண்களையும் மணமுடிப்பாய்
பெற்ற பிள்ளையையும் தந்தையையும் பிரித்து வைப்பாய்
ஆண் : ஹையோ
ஆண் : பேரழகுப் பெண்களையும் மணமுடிப்பாய்
பெற்ற பிள்ளையையும் தந்தையையும் பிரித்து வைப்பாய்
காரேறி ரோட்டினிலே பறக்க வைப்பாய்
சிலரைக் கடனாளியாக்கி விட்டு விடை கொடுப்பாய் ( பண)
ஆண்கள் : அப்பா பண நாதா இன்பக் குண நாதா
அப்பா பண நாதா இன்பக் குண நாதா
ஆண் : தற்குறிகள் பக்கத்திலே நீ இருந்தால்
ஆண் : அவர்கள் சரித்திரத்து வீரர்களாய் மாறி விடுவாய்
ஆண் : இந்த தற்குறிகள் பக்கத்திலே நீ இருந்தால்
ஆண் : அவர்கள் சரித்திரத்து வீரர்களாய் மாறி விடுவாய்
ஆண் : கற்றறிந்த பேர்களிடம் இல்லை நீயென்றால்
கற்றறிந்த பேர்களிடம் இல்லை நீயென்றால்
அவர் கந்தல் கட்டிச் சுண்டலுக்குக் காத்துக் கிடப்பார்
ஆண்கள் : அப்பா பண நாதா இன்பக் குண நாதா
அப்பா பண நாதா இன்பக் குண நாதா