Singers : T. M. Soundararajan and S. Janaki
Music by : Vishwanathan-Ramamoorthy
Female : Pandhal irundhaal kodi padarum
Paalam amaindhaal vazhi thodarum
Pandhal irundhaal kodi padarum
Paalam amaindhaal vazhi thodarum
Kaigal saerndhaal oli pirakkum
Idhazhgal saerndhaal mozhi pirakkum
Female : Pandhal irundhaal kodi padarum
Paalam amaindhaal vazhi thodarum
Male : Nenjinil aasai niraindhirukkum
Nilamaiyum adhanai maraithirukkum
Nenjinil aasai niraindhirukkum
Nilamaiyum adhanai maraithirukkum
Kaalam vandhaal kaai pazhukkum
Kaathirundhaal kani kidaikkum
Female : Pandhal irundhaal kodi padarum
Paalam amaindhaal vazhi thodarum
Female : Kadal naduvae neer thee pidikkum
Iru kangalum imaiyidam edhai kaetkkum
Kanniyin ullam yaen mayangum
Aval kannam irandum yaen sivakkum
Male : Kaadhal neruppil kulithirukkum
Anbu kannirandum adhil padhindhirukkum
Komala maambazha kannathilae
Idhazh kungumathai alli iraithirukkum
Kungumathai alli iraithirukkum
Female : Pandhal irundhaal kodi padarum
Paalam amaindhaal vazhi thodarum
Female : Idai thazhuvum kaigal maalaigalo
Ungal idhayangalum vanna malaranaiyo
Madai thirakkum angu aasaigalo
Sindhum vaarthai ellaam angu paavaigalo
Male : Kan irandum oli vilakkugalo
Iru kani idhazh rathina kadhavugalo
Kannangalum thanga paalangalo
En kaadhalukkae thandha parisugalo
Kaadhalukkae thandha parisugalo
Female : Pandhal irundhaal kodi padarum
Paalam amaindhaal vazhi thodarum
Both : Kaigal saerndhaal oli pirakkum
Idhazhgal saerndhaal mozhi pirakkum
Aahahaa haahaa aahahahaa…
Aahahaa haahaa aahahahaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்
பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
ஆண் : நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்
நிலமையும் அதனை மறைத்திருக்கும்
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்
நிலமையும் அதனை மறைத்திருக்கும்
காலம் வந்தால் காய் பழுக்கும்
காத்திருந்தால் கனி கிடைக்கும்
பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
பெண் : கடல் நடுவே நீர் தீ பிடிக்கும்
இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும்
கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும்
அவள் கன்னம் இரண்டும் ஏன் சிவக்கும்
ஆண் : காதல் நெருப்பில் குளித்திருக்கும்
அன்பு கண்ணிரண்டும் அதில் பதிந்திருக்கும்
கோமள மாம்பழ கன்னத்திலே
இதழ் குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும்
குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும்
பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
பெண் : இடை தழுவும் கைகள் மாலைகளோ
உங்கள் இதயங்களும் வண்ண மலரணையோ
மடை திறக்கும் அங்கு ஆசைகளோ
சிந்தும் வார்த்தை எல்லாம் அங்கு பாவைகளோ
ஆண் : கண் இரண்டும் ஒளி விளக்குகளோ
இரு கனி இதழ் ரத்தின கதவுகளோ
கன்னங்களும் தங்க பாளங்களோ
என் காதலுக்கே தந்த பரிசுகளோ
காதலுக்கே தந்த பரிசுகளோ….
பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
இருவர் : கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்
ஆஹஹா ஹாஹா ஆஹஹஹா…
ஆஹஹா ஹாஹா ஆஹஹஹா…