Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kannadasan

Male : Pani malai megangal
Pozhigindra kulirinil
Thirukkural padikkattuma
Kannae pudhu kural kodukkattuma

Female : Pani malai megangal
Pozhigindra kulirinil
Thirukkural padikkattuma
Kanna pudhu kural kodukkattuma

Female : Maragadha poonjittu
Mani mandra kaatru
Malai mugil koondhalai izhai pinnikkattu
Male : Haa..kuzhallukkul yaazhukkul Oodidum kaatru
Konjattumae ingu un mozhi kettu

Female : Poovaiyin kannathil poomethai pottu
Male : Boomiyin maeniyil ooviyam theettu

Female : Pani malai megangal
Pozhigindra kulirinil
Male : Thirukkural padikkattuma
Kannae pudhu kural kodukkattuma

Humming : ……………

Male : Ani aniyaai varum
Nagai muthu maalai
Adikkadi thendralil silirkkindra solai
Female : Mani maniyaai minnum
Velavan velai
Vadithitta kannukku ver enna velai

Male : Thottadhu pennaaga
Thodarattum maalai
Female : Kodhaiyin mayakkathil
Vidiyattum kaalai

Male : Pani malai megangal
Pozhigindra kulirinil
Female : Thirukkural padikkattuma
Kanna pudhu kural kodukkattuma

Female : Pidipadum kaadhal
Kodippadum naanam
Pirivukku idam illai uravugal melam
Male : Managla vaazhaiyin
Thorana vasal
Mandhiram sonnaal ver enna thonum

Female : Oodalil padattum
Or siru ragam
Male : Koodalil kaanattum
Aanandha thaalam

Female : Pani malai megangal
Pozhigindra kulirinil
Thirukkural padikkattuma
Kanna pudhu kural kodukkattuma

Male : Pani malai megangal
Pozhigindra kulirinil
Thirukkural padikkattuma
Kannae pudhu kural kodukkattuma

பாடகர்கள்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பனி மலை மேகங்கள்
பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே
புதுக் குரல் கொடுக்கட்டுமா

பெண் : பனி மலை மேகங்கள்
பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா
புதுக் குரல் கொடுக்கட்டுமா

பெண் : மரகத பூஞ்சிட்டு மணி மன்ற காற்று
மலை முகில் கூந்தலை இழைப் பின்னிக்காட்டு
ஆண் : ஹா குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் காற்று
கொஞ்சட்டுமே இங்கு உன் மொழி கேட்டு

பெண் : பூவையின் கன்னத்தில் பூ மெத்தை போட்டு
ஆண் : பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு

பெண் : பனி மலை மேகங்கள்
பொழிகின்ற குளிரினில்
ஆண் : திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே
புதுக் குரல் கொடுக்கட்டுமா

முனகல் : ……………..

ஆண் : அணி அணியாய் வரும் நகை முத்து மாலை
அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை
பெண் : மணி மணியாய் மின்னும் வேலவன் வேலை
வடித்திட்ட கண்ணுக்கு வேறேன்ன வேலை

ஆண் : தொட்டது பொன்னாக
தொடரட்டும் மாலை
பெண் : கோதையின் மயக்கத்தில்
விடியட்டும் காலை…..

ஆண் : பனி மலை மேகங்கள்
பொழிகின்ற குளிரினில்
பெண் : திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா
புதுக் குரல் கொடுக்கட்டுமா

பெண் : பிடிப்படும் காதல் கொடிப்படும் நாணம்
பிரிவுக்கு இடமில்லை உறவுக்கு மேளம்
ஆண் : மங்கல வாழையின் தோரண வாசல்
மந்திரம் சொன்னால் வேறென்ன தோணும்

பெண் : ஊடலில் பாடட்டும் ஓர் சிறு ராகம்
ஆண் : கூடலில் காணட்டும் ஆனந்த தாளம்

பெண் : பனி மலை மேகங்கள்
பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா
புதுக் குரல் கொடுக்கட்டுமா

ஆண் : பனி மலை மேகங்கள்
பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே
புதுக் குரல் கொடுக்கட்டுமா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here