Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : ………………..

Female : ………………

Male : Panjaangam parththu sollavaa….oo….oo…oo….
Panjaangam parththu sollavaa….aa….aa….aa….
Panguniyaa chiththiraiyaa engae nalla naal
Panguniyaa chiththiraiyaa engae nalla naal
Kangalaal aa….aa….aa….sollammaa

Female : Aaththula vellam odura naala
Paarththuttu vaanga yaeththukkaraen
Aaththula vellam odura naala
Paarththuttu vaanga yaeththukkaraen
Kaattila poovum koottida thaenum

Female : Aasai irukku pesi mudikka
Aasai irukku pesi mudikka
Sollaththaan theriyaathu

Female : Panjaangam parththu sollunga yae….
Panguniyaa chiththiraiyaa engae nalla naal
Sollaththaan theriyaathu

Male : ……………….

Female : ……………..

Male : Mangai maeniyil pongum mangalam
Kangal unnattum
Vannathaamarai thulla thulla
Kaigal pinnattum

Male : Mangai maeniyil pongum mangalam
Kangal unnattum
Vannathaamarai thulla thulla
Kaigal pinnattum

Female : Udhattukku melae ooruthu yaetho
Udambilae kooda maaruthu yaetho hae…yae…yae…
Udhattukku maelae ooruthu yaetho
Udambilae kooda maaruthu yaetho

Male : ……………

Female : Neththukku manathu ketkuthu yaetho
Sollunga konjam kettukkuraen
Sonnathaiyellaam thaniyaa poyi
Oththigai konjam paarththukaraen….aa…aa…oo….oo….

Male : …………….

Female : Thottu thottu pesa pesa
Sogamaa irukkunga
Male : Thottaal pothum paththaam maatham
Thottil aadunga

Female : Thottu thottu pesa pesa
Sogamaa irukkunga
Male : Thottaal pothum paththaam maatham
Thottil aadunga

Female : Chinnam sirusu anupavam illai
Yaedho konjam parththukunga hae hae…yae…yae….

Male : Maanganai kannam poongodi maeni
Theengu varaamal paarththukkaraen
Female : Appadi sonnaa ippavae sarithaan
Kai pidiyaaga saerththukkiraen
Both : Aaahaahaahaa ooohoh….

Male : Panjaangam parththu sollavaa….oo….oo…oo….
Female : Panguniyaa chiththiraiyaa engae nalla naal
Male : Kangalaal aa….aa….aa….sollammaa

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ………………………………..

பெண் : ………………………….

ஆண் : பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ….ஓ……ஒ
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆ….ஆ….ஆ
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
கண்களால் ஆஆ……ஆஆ…….ஆ சொல்லம்மா

பெண் : ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்
காட்டில பூவும் கூட்டில தேனும்
பொங்குற போது சேத்துக்கறேன்

பெண் : ஆசை இருக்கு பேசி முடிக்க
ஆசை இருக்கு பேசி முடிக்க
சொல்லத்தான் தெரியாது

பெண் : பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏ…….
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
சொல்லத்தான் தெரியாது

ஆண் : ……………………..

பெண் : ………………………..

ஆண் : மங்கை மேனியில் பொங்கும் மங்களம்
கண்கள் உண்ணட்டும்
வண்ணத்தாமரை துள்ள துள்ள
கைகள் பின்னட்டும்

ஆண் : மங்கை மேனியில் பொங்கும் மங்களம்
கண்கள் உண்ணட்டும்
வண்ணத்தாமரை துள்ள துள்ள
கைகள் பின்னட்டும்

பெண் : உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ
உடம்பிலே கூட மாறுது ஏதோ ஹே…..ஏ…ஏ
உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ
உடம்பிலே கூட மாறுது ஏதோ

ஆண் : ………………….

பெண் : நேத்துக்கு மனது கேட்குது ஏதோ
சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன்
சொன்னதையெல்லாம் தனியா போயி
ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்……ஆ…..ஆ….ஓ….ஓ……

ஆண் : ………………………..

பெண் : தொட்டு தொட்டுப் பேசப்பேச
சொகமா இருக்குங்க
ஆண் : தொட்டால் போதும் பத்தாம் மாதம்
தொட்டில் ஆடுங்க

பெண் : தொட்டு தொட்டுப் பேசப்பேச
சொகமா இருக்குங்க
ஆண் : தொட்டால் போதும் பத்தாம் மாதம்
தொட்டில் ஆடுங்க

பெண் : சின்னம் சிறுசு அனுபவம் இல்லை
ஏதோ கொஞ்சம் பார்த்துகுங்க ஹே ஹே…ஏ….ஏ….

ஆண் : மாங்கனி கன்னம் பூங்கொடி மேனி
தீங்கு வராமல் பார்த்துக்கறேன்
பெண் : அப்படி சொன்னா இப்பவே சரிதான்
கைப் பிடியாக சேர்த்துக்கிறேன்
இருவர் : ஆஆஹாஹாஹ் ஓஓஹோஹ்…..

ஆண் : பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ….ஓ….ஒ
பெண் : பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
ஆண் : கண்களால் ஆஆ…..ஆ….ஆஆ……சொல்லம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here