Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : ………………

Male : Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa
Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa
Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha
Sarigamapathanisa sarasamulla sarasaa

Chorus : ……………….

Male : Isaiyinil vazhigindra inimaiyil
Vizhugindra idhayangal ingu varuga
Irukkindra varaiyinil kidaikkindra
Sugangalil anaivarum pangu peruga

Male : Isaiyinil vazhigindra inimaiyil
Vizhugindra idhayangal ingu varuga
Irukkindra varaiyinil kidaikkindra
Sugangalil anaivarum pangu peruga

Male : Yaarum innaeram kaiththaalam podungal
Yaarum innaeram kaiththaalam podungal
Yaavum ullaasam en paattai kelungal
Intha bhoomiyil vantha velaiyae inbamaaga vaazha
Indru polavae naan
Endrum paaduven ungal saarbaaga

Male : Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa
Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha
Sarigamapathanisa sarasamulla sarasaa

Male : Paiyirendil kaiyai vittu
Kaaseduthu ulla mattum alli viduga
Vaiyagaththil sorkkamondru
Vanthathendru enni kondu
Ellorum thulli vizhuga

Male : Kaalam ennaalum porkkaalam aagattum
Geedham sangeetham engengumm ketkattum
Iravu enbathu iraivan thanthathae
Aattam pottu paarkka
Inimaiyaana en kural piranthathu
Bodhai undaakka….

Male : Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa
Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha
Sarigamapathanisa sarasamulla sarasaa
Sarasamulla sarasaa…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : …………………

ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா
பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா
மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா
ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா….

குழு : …………………….

ஆண் : இசையினில் வழிகின்ற இனிமையில்
விழுகின்ற இதயங்கள் இங்கு வருக
இருக்கின்ற வரையினில் கிடைக்கின்ற
சுகங்களில் அனைவரும் பங்கு பெறுக

ஆண் : இசையினில் வழிகின்ற இனிமையில்
விழுகின்ற இதயங்கள் இங்கு வருக
இருக்கின்ற வரையினில் கிடைக்கின்ற
சுகங்களில் அனைவரும் பங்கு பெறுக

ஆண் : யாரும் இந்நேரம் கைத்தாளம் போடுங்கள்
யாரும் இந்நேரம் கைத்தாளம் போடுங்கள்
யாவும் உல்லாசம் என் பாட்டை கேளுங்கள்
இந்த பூமியில் வந்த வேளையே இன்பமாக வாழ
இன்று போலவே நான்
என்றும் பாடுவேன் உங்கள் சார்பாக

ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா
மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா
ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா….

ஆண் : பையிரெண்டில் கையை விட்டு
காசெடுத்து உள்ள மட்டும் அள்ளி விடுக
வையகத்தில் சொர்க்கமொன்று
வந்ததென்று எண்ணிக் கொண்டு
எல்லோரும் துள்ளி விழுக

ஆண் : காலம் எந்நாளும் பொற்காலம் ஆகட்டும்
கீதம் சங்கீதம் எங்கெங்கும் கேட்கட்டும்
இரவு என்பது இறைவன் தந்ததே
ஆட்டம் போட்டு பார்க்க
இனிமையான என் குரல் பிறந்தது
போதை உண்டாக்க…..

ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா
மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா
ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா….
சரசமுள்ள சரஸா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here