Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Paarvathi ennai paaradi…
Poongodi vandhu seradi…

Male : Chinna poongili…
Ennai chaerumo…

Male : Chinna poongili
Ennai chaerumo
Mayakkam nenjodu thaan
Vanna poongodi vandhu koodumo
Kalakkam kannodu thaan

Male : Solaiyo nadu chaalaiyo
Thaedinen unaiyae
Kaalaiyo andhi maalaiyo vaadinen
Idhayam iniyum saranam

Male : Chinna poongili
Ennai chaerumo
Mayakkam nenjodu thaan
Vanna poongodi vandhu koodumo
Kalakkam kannodu thaan

Male : Vaedan vandhu
Soozhndha podhum
Un ellai thaan
Vaedanthaangal endru ennum
Poongillai naan

Male : Mullil vaeli pottaal enna
Maalai kaatru thaandaadhaa
Kallil oorum jaadhi poovai
Kaigal neetti theendaadhaa

Male : Nee allaal uyir ver yedhu
Neer indri payir vaadudhu
Dheviyae endhan aaviyae keladi
Idhayam iniyum saranam

Male : Chinna poongili
Ennai chaerumo
Mayakkam nenjodu thaan
Vanna poongodi vandhu koodumo
Kalakkam kannodu thaan

Male : Unnai chaerndhu
Vaazha thaanae
Naan vaazhvadhu
Unnai neengi dhegam ingae
Yen vaazhvadhu

Male : Mannil vaazhum ezhaikkellaam
Pennin mogam aagaadhaa
Mannaal seidha paandam endraal
Pongum soru vegaadhaa

Male : Dhevadhaas kadhai paaradi
Oindhadhaa badhil kooradi
Kaadhali endhan paarvathi kaadhalan
Idhayam iniyum saranam

Male : Chinna poongili
Ennai chaerumo
Mayakkam nenjodu thaan
Vanna poongodi vandhu koodumo
Kalakkam kannodu thaan

Male : Solaiyo nadu chaalaiyo
Thaedinen unaiyae
Kaalaiyo andhi maalaiyo vaadinen
Idhayam iniyum saranam

Male : Chinna poongili
Ennai chaerumo
Mayakkam nenjodu thaan
Vanna poongodi vandhu koodumo
Kalakkam kannodu thaan

பாடகர் : எஸ். பி பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பார்வதி என்னைப் பாரடி…
பூங்கொடி வந்து சேரடி…
சின்னப் பூங்கிளி…
என்னைச் சேருமோ…

ஆண் : சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி
வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்

ஆண் : சோலையோ நடுச்சாலையோ
தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ
வாடினேன்
இதயம் இனியும் சரணம்

ஆண் : சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி
வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்

ஆண் : வேடன் வந்து
சூழ்ந்த போதும்
உன் எல்லை தான்
வேடந்தாங்கல் என்று எண்ணும்
பூங்கிள்ளை நான்

ஆண் : முள்ளில் வேலி
போட்டால் என்ன
மாலைக் காற்று தாண்டாதா
கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை
கைகள் நீட்டித் தீண்டாதா

ஆண் : நீ அல்லால் உயிர் வேறெது
நீர் இன்றி பயிர் வாடுது
தேவியே எந்தன் ஆவியே கேளடி
இதயம் இனியும் சரணம்

ஆண் : சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி
வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்

ஆண் : உன்னைச் சேர்ந்து
வாழத்தானே நான் வாழ்வது
உன்னை நீங்கி தேகம் இங்கே
ஏன் வாழ்வது

ஆண் : மண்ணில் வாழும்
ஏழைக்கெல்லாம்
பெண்ணின் மோகம் ஆகாதா
மண்ணால் செய்த பாண்டம் என்றால்
பொங்கும் சோறு வேகாதா

ஆண் : தேவதாஸ் கதை பாரடி
ஓய்ந்ததா பதில் கூறடி
காதலி எந்தன் பார்வதி காதலன்
இதயம் இனியும் சரணம்

ஆண் : சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி
வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்

ஆண் : சோலையோ நடுச்சாலையோ
தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ
வாடினேன்
இதயம் இனியும் சரணம்

ஆண் : சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி
வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here