Singers : T. M. Soundararajan, P. Susheela and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Manam mudikkum naal vanthatho
Paasa malarae anbil vilaintha vaasa malarae
Manam mudikkum naal vanthatho

Male : Un madiyinil thavazhnthidum veenai
Ini mayangidum thunaivarum naalai
Un mounam….isaikkum…..geedhamae

Male : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Manam mudikkum naal vanthatho

Female : Muththu manicharam modhiram nagaigal poottavae
Mullai malar charam malligai kuzhalil soottavae
Vanna karangalil thaayival valaiyal maattuvaen
Chinna vizhigalin oram engum maiyai theettavae

Mael : Kanmaniyae engal ponmaniyae
Nalla karpagamae penmai arputhamae
Nee medai vanthu maalai kollum
Vaibogamae….dheiveegamae

Female : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Male : Manam mudikkum naal vanthatho

Male : Nettri thilagamum thaaliyum nilaiththu vaazhgavae
Female : Vettri thirumagal vaasalai nalangal soozhgavae
Male : Anbai uraiththida vaayillaatha azhagu silaiyival
Female : Konda pasiyaiyum kooridaatha kuzhanthai pondraval

Male : Un vasaththil intha oomai kuyil
Ival inbam thunbam ini unthan kaiyil
Nee kaaval nidru kaaththiduga kann polavae pon polavae

Male : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Kulamagal nee vaazhgavae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுஷீலா மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ

ஆண் : உன் மடியினில் தவழ்ந்திடும் வீணை
இனி மயக்கிடும் துணைவரும் நாளை
உன் மௌனம்……….இசைக்கும்………கீதமே

ஆண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ

பெண் : முத்து மணிச்சரம் மோதிரம் நகைகள் பூட்டவே
முல்லை மலர் சரம் மல்லிகை குழலில் சூட்டுவே
வண்ணக் கரங்களில் தாயிவள் வளையல் மாட்டுவேன்
சின்ன விழிகளின் ஓரம் எங்கும் மையை தீட்டவே

ஆண் : கண்மணியே எங்கள் பொன்மணியே
நல்ல கற்பகமே பெண்மை அற்புதமே
நீ மேடை வந்து மாலைக் கொள்ளும்
வைபோகமே……தெய்வீகமே

பெண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
ஆண் : மணம் முடிக்கும் நாள் வந்ததோ

ஆண் : நெற்றி திலகமும் தாலியும் நிலைத்து வாழ்கவே
பெண் : வெற்றித் திருமகள் வாசலை நலங்கள் சூழ்கவே
ஆண் : அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலையிவள்
பெண் : கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்

ஆண் : உன் வசத்தில் இந்த ஊமைக் குயில்
இவள் இன்பம் துன்பம் இனி உந்தன் கையில்
நீ காவல் நின்று காத்திடுக கண் போலவே பொன் போலவே

ஆண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
குலமகளே நீ வாழ்கவே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here