Singers : P. Susheela and Seerkazhi Govindarajan

Music by : Master Venu

Lyrics by : Udumalai Narayanakavi

Male : Pattanam thaan pogalaamadi pombalae
Panangkaasu thedalaamadi
Nalla kattani muthae en kannatti neeyum
Vaadi pondaatti thaayae

Female : Townu pakkam pogathingha maapillae
Downaai poyiduvingha
Andha daambeegam ezhaikku thangaadhu Payanam
Vendaanna kelu maama

Male : Kettvanga pattanathai
Ottikonum enbadhaalae
Kettvanga pattanathai
Ottikonum enbadhaalae
Pattikattai vittu pottu
Pala perum povadhaalae

Male : Kattu sothai katti kolladi pombalae
Thatti sonnaa kekka mattendi
Nalla kattani muthae en kannatti neeyum
Vaadi pondaatti thaayae

Female : Velai yedhungha?
Kooli yedhungha?
Vetka kettai solren kelungha
Angae velai yedhungha?
Kooli yedhungha?
Vetka kettai solren kelungha

Female : College padipu kaappiyaathuthaam
B. A. padippu benchu thudaikkudhaam
Aalai yeichu aalu polachukudhaam
Anjukku rendu kanjikalaiyudhaam
Melae ponadhu noothila onnaam
Micham ulladhu lottery adikuthaam

Male : Eppadi

Female : Onnaana saami ellam onnumae
Ennaama thavikaiyilae ..maapillai
Onnaana saami ellam onnumae
Ennaama thavikaiyilae .
Unnalae ennaagum ennama ponaa
Pinnalae kedu maama

Male : Raathiri pagala rickshaw iluppen
Naisa pesi paisa izhuppen
Raathiri pagala rickshaw iluppen
Naisa pesi paisa izhuppen
Drama cinema circus paarppen
Raaja maadhiri cigarettum pidippen

Male : Verthu puzhunguna beachuku poven
Meendha panathjilae meenu vaanguven
Aathaadi un kaiyilae kuduppen
Aakka solliyae sappitu paduppen..
Female : Melae

Male : Ithukku melae solla mattenadi pomblae
Indha ooril irukka mattendi
Naan ippodhae povonum
Ungappaavai kettu
Yedhaachum vaanghi vaadi

Male : Pattanam thaan pogalaamadi pombalae
Panangkaasu thedalaamadi
Nalla kattani muthae en kannatti neeyum
Vaadi pondaatti thaayae

Female : Townu pakkam pogathingha maapillae
Downaai poyiduvingha
Andha daambeegam ezhaikku thangaadhu Payanam
Vendaanna kelu maama

Female : Manushanai manushan izhukkura velai
Vayiru kainjavan seiyura velai
Manushanai manushan izhukkura velai
Vayiru kainjavan seiyura velai
Kanakkum meeri panam vandha podhu
Manushanai summa irukk vidathu

Female : Ennai maranthu unnai maranthu
Ella velaiyum seiyavae thuninju
Iravu raanigal valaiyilae vizhundhu
Emaanthu povae innum kelu…

Male : Appuram

Female : Police puli pudikkum maappilae
Purraavai peyrthedukkum
Angae povadhae veenaaga saavadhae maama
Pen saadhi pechai kelu
Male : Appadiyaa aahaa

Male : Nee ulagam arinja pomnaatti
Naan onnumae theriyaa kammunaatti
Nee ulagam arinja pomnaatti
Naan onnumae theriyaa kammunaatti
Ooru vittu ooru ponaa seeru kettu pogum innu
Ooru vittu ooru ponaa seeru kettu pogum innu
Unmaiyoda sonna sollu
Nanmaiyaga thonudhu

Male : Pattanam poga mattendi
Unnaiyum payanamaaga solla mattendi
Nalla kattani muthae en kannai thorandhava
Nee dhaan pondaatti thaayae
Female : Maama..Male : Yemma?

Female : Ennai thaniya vidave mattennu
En thalai mel adichu sathiyam pannu
Male : Engappanaanae sathiyam sathiyam sathiyam

Both : {Yerotti paathi pidichi adhilae
Neer paichi nella vedhachi
Namm ooroda onnaaga ulladhai kondu
Naam ullasamaga vaazhvom} (2)

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

ஆண் : பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணங்காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

பெண் : டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுனாயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா

ஆண் : கெட்டவங்க பட்டணத்தை
ஒட்டிக்கோணும் என்பதாலே
கெட்டவங்க பட்டணத்தை
ஒட்டிக்கோணும் என்பதாலே
பட்டிக்காட்டை விட்டுப் போட்டு
பல பேரும் போவதாலே

ஆண் : கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

பெண் : அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேங் கேளுங்க
அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேங் கேளுங்க

பெண் : காலேஜு படிப்பு காப்பியாத்துதாம்
பி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம்
ஆளை ஏய்ச்சி ஆளு பொழைக்குதாம்
அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போனது நூத்திலே ஒண்ணாம்
மிச்சம் உள்ளது லாட்டரி அடிக்குதாம்..
ஆண் : எப்படி..

பெண் : ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே…..மாப்பிள்ளே
ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணாம போனா
பின்னாலே கேடு மாமா…..

ஆண் : ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
டிராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன்
ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்

ஆண் : வேர்த்துப் புழுங்குனாப் பீச்சுக்குப் போவேன்
மீந்த பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன்
ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்..
பெண் : மேலே…?

ஆண் : இதுக்கு மேலே
சொல்ல மாட்டேண்டி பொம்பளே
இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி
நான் இப்போதே போவோணும்
உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி

ஆண் : பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணங்காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

பெண் : டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுனாயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா

பெண் : மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
கணக்குக்கும் மீறி பணம் வந்த போது
மனுஷனை சும்மா இருக்க விடாது

பெண் : என்னை மறந்து உன்னை மறந்து
எல்லா வேலையும் செய்யவே துணிஞ்சு
இரவு ராணிகள் வலையிலே விழுந்து
ஏமாந்து போவே…..இன்னும் கேளு…
ஆண் : அப்புறம்..?

பெண் : போலீசுப் புலி புடிக்கும் மாப்பிள்ளே
புர்ராவைப் பெயர்த்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா
பெண்சாதி பேச்சைக் கேளு….
ஆண் : அப்பிடியா…ஆஹா….

ஆண் : நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு
உண்மையோட சொன்ன சொல்லு
நன்மையாக தோணுது….

ஆண் : பட்டணம்தான் போக மாட்டேண்டி
உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே
என் கண்ணைத் தொறந்தவ நீ தான்
பொண்டாட்டி தாயே…..
பெண் : மாமா…ஆண் : ஏம்மா?

பெண் : என்னைத் தனியா விடவே மாட்டேனுன்னு
என் தலை மேலடிச்சி சத்தியம் பண்ணு
ஆண் : எங்கப்பனானே சத்தியம் ..சத்தியம் .. சத்தியம் ..

இருவரும் : {ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே
நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு
நாம் உல்லாசமாக வாழ்வோம்……} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here