Pendatti Purushan Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu,  Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “P. Susheela and T. V. Rathinam” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.

Singers : P. Susheela and T. V. Rathinam

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Female : Pendaataati purushanukku
Palamaana sonthamae
Pillai kutti aana pinnae
Piriyaatha panthamae

Female : Pendaataati purushanukku
Palamaana sonthamae
Pillai kutti aana pinnae
Piriyaatha panthamae

Female : Nadu kaavil paatham thannil
Paambae kadikkumendraar
Vazhi thedalaanaenae paar meethu naanae
Aiyyo….oo…oo….oo…oo….oo….oo..
Vazhi thedalaanaenae paar meethu naanae

Female : Mangala maangalyam malligai poo poche
Mannavan thannodu vaazhkkaiyum poche
Nangai en male anbu nalgidum naagappaa
Nangai en male anbu nalgidum naagappaa
Naadhanin uyir meela neeyandri yaarappa….
Naadhanin uyir meela neeyandri yaarappa…

Female : Mangala maangalyam malligai poo poche
Mannavan thannodu vaazhkkaiyum poche
Mangala maangalyam malligai poo poche
Mannavan thannodu vaazhkkaiyum poche

Female : Mannulagil oorvalaththil mithiththaanae
Enthan manimudi meedhu kaalil udhaiththaanae
Munnamengal kuttigalai vathaiththaanae
Munnamengal kuttigalai vathaiththaanae
Muppazhaiyum pippazhiyum mudiththaenae

Female : Ival meela maattaan ini vaazha maattaan
Vidhi yaarai vittathu vidhi yaarai vittathu

Female : Pasu maattu paalu kozhi andam thaaraen
Palakaara patchanangal veruveru pandam
Isai paadi padham pottri thandam seivaen
Isai paadi padham pottri thandam seivaen
Ippothae theerkka vendum en naathan kandam

Female : Pasu maattu paalu kozhi andam thaaraen
Palakaara patchanangal veruveru pandam

Female : Sethavan pizhaiththathu jegaththin meedhilae
Eppavum kidaiyaathu
Sethavan pizhaiththathu jegaththin meedhilae
Eppavum kidaiyaathu
Deiva neethi Idhu ini seivathaethu

Female : Ivan jeevan ponathu ponathuthaan
Ival meela maattaan ini vaazhamaattaan
Ival meela maattaan ini vaazhamaattaan
Vidhi yaarai vittathu vidhi yaarai vittathu

Female : Paththini naanae enbathu
Evarum theriyavae intha paar melae sudum agni
Paththi eriyavae
Dhushta paambu nee ariyavae
Un suttram yaavum azhiyavae….

பாடகர்கள் : பி. சுசிலா மற்றும் டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : பெண்டாட்டி புருஷனுக்கு
பலமான சொந்தமே
பிள்ளைக் குட்டி ஆன பின்னே
பிரியாத பந்தமே

பெண் : பெண்டாட்டி புருஷனுக்கு
பலமான சொந்தமே
பிள்ளைக் குட்டி ஆன பின்னே
பிரியாத பந்தமே

பெண் : நடு காவில் பாதம் தன்னில்
பாம்பே கடிக்குமென்றார்
வழி தேடலானேனே பார் மீது நானே
அய்யோ….ஓ…ஓ….ஓ…ஒ…ஒ…ஒ…
வழி தேடலானேனே பார் மீது நானே

பெண் : மங்கல மாங்கல்யம் மல்லிகை பூ போச்சே
மன்னவன் தன்னோடு வாழ்க்கையும் போச்சே
நங்கை என் மேல் அன்பு நல்கிடும் நாகப்பா
நங்கை என் மேல் அன்பு நல்கிடும் நாகப்பா
நாதனின் உயிர் மீள நீயன்றி யாரப்பா….
நாதனின் உயிர் மீள நீயன்றி யாரப்பா….

பெண் : மங்கல மாங்கல்யம் மல்லிகை பூ போச்சே
மன்னவன் தன்னோடு வாழ்க்கையும் போச்சே
மங்கல மாங்கல்யம் மல்லிகை பூ போச்சே
மன்னவன் தன்னோடு வாழ்க்கையும் போச்சே

பெண் : மண்ணுலகில் ஊர்வலத்தில் மிதித்தானே
எந்தன் மணிமுடி மீது காலில் உதைத்தானே
முன்னமெங்கள் குட்டிகளை வதைத்தானே
முன்னமெங்கள் குட்டிகளை வதைத்தானே
முப்பழியும் பிப்பழியும் முடித்தேனே

பெண் : இவன் மீள மாட்டான் இனி வாழ மாட்டான்
விதி யாரை விட்டது விதி யாரை விட்டது….

பெண் : பசு மாட்டு பாலு கோழி அண்டம் தாரேன்
பலகார பட்சணங்கள் வேறுவேறு பண்டம்
இசை பாடி பதம் போற்றி தண்டம் செய்வேன்
இசை பாடி பதம் போற்றி தண்டம் செய்வேன்
இப்போதே தீர்க்க வேண்டும் என் நாதன் கண்டம்

பெண் : பசு மாட்டு பாலு கோழி அண்டம் தாரேன்
பலகார பட்சணங்கள் வேறுவேறு பண்டம்

பெண் : செத்தவன் பிழைத்தது ஜெகத்தின் மீதிலே
எப்பவும் கிடையாது
செத்தவன் பிழைத்தது ஜெகத்தின் மீதிலே
எப்பவும் கிடையாது
தெய்வ நீதி இது இனி செய்வதேது

பெண் : இவன் ஜீவன் போனது போனதுதான்
இவன் மீள மாட்டான் இனி வாழ மாட்டான்
இவன் மீள மாட்டான் இனி வாழ மாட்டான்
விதி யாரை விட்டது விதி யாரை விட்டது….

பெண் : பத்தினி நானே என்பது
எவரும் தெரியவே இந்த பார் மேலே சுடும் அக்னி பத்தி
எரியவே
துஷ்ட பாம்பு நீ அறியவே
உன் சுற்றம் யாவும் அழியவே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here