Singer : K. Jamuna Rani

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Aaa…aa….aa…..aaa…..aaa…..
Mmm…mm…mm..mm..mm..mm..mm

Female : Penn paarka mappillai vanthaar
Penn paarka mappillai vanthaar
Vanthaar vanthaarae
Penn paarka mappillai vanthaar
Vanthaar vanthaarae
Penn paarka mappillai vanthaar

Female : Kann patta mogamo
Kai patta vegamo
Pun patta nenjilum
Pudhumaigal thondrumo
Ennangal maariyum
Maaratha sondhamo

Female : Ennangal maariyum
Maaratha sondhamo
Pennmaiyin needhiyil
Panpatta bandhamo

Female : Penn paarka mappillai vanthaar
Vanthaar vanthaarae
Penn paarka mappillai vanthaar

Female : Venn mullai solaiyil
Ponn vandu paadumo
Ponn vandu paadinaal
Poonthendral veesumo
Poonthendral veesinaal
Paruvangal pesumo

Female : Poonthendral veesinaal
Paruvangal pesumo
Paruvangal pesinaal
Palan indri pogumoo

Female : Penn paarka mappillai vanthaar
Aaaa….aaaa….haaa…..
Penn paarka mappillai vanthaar

Female : Mann petra pillaigal
Ennattra kodiyae
Ennattra kodiyil
Penn makkal paadhiyae
Penn makkal kaadhalai
Aan makkal naadiyae

Female : Penn makkal kaadhalai
Aan makkal naadiyae
Manamaalai soodidum
Medaiyai thediyae

Female : Penn paarka mappillai vanthaar
Vanthaar vanthaarae
Penn paarka mappillai vanthaar

பாடகி : கே. ஜமுனா ராணி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஆ….ஆ…..ஆ..ஆ…..ஆஆ……ஆஅ….
ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…..ம்ம்….ம்ம்…..ம்ம்….ம்ம்

பெண் : பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்
வந்தார் வந்தாரே….
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்
வந்தார் வந்தாரே….
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்

பெண் : கண் பட்ட மோகமோ
கைபட்ட வேகமோ
புண்பட்ட நெஞ்சிலும்
புதுமைகள் தோன்றுமோ
எண்ணங்கள் மாறியும்
மாறாத சொந்தமோ

பெண் : எண்ணங்கள் மாறியும்
மாறாத சொந்தமோ
பெண்மையின் நீதியில்
பண்பட்ட பந்தமோ

பெண் : பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்
வந்தார் வந்தாரே….
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்

பெண் : வெண்முல்லைச் சோலையில்
பொன்வண்டு பாடுமோ
பொன்வண்டு பாடினால்
பூந்தென்றல் வீசுமோ
பூந்தென்றல் வீசினால்
பருவங்கள் பேசுமோ

பெண் : பூந்தென்றல் வீசினால்
பருவங்கள் பேசுமோ
பருவங்கள் பேசினால்
பலனின்றி போகுமோ

பெண் : பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்
ஆஆ….ஆஅ….ஹா…..
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்

பெண் : மண் பெற்ற பிள்ளைகள்
எண்ணற்ற கோடியே
எண்ணற்ற கோடியில்
பெண் மக்கள் பாதியே
பெண் மக்கள் காதலை
ஆண் மக்கள் நாடியே

பெண் : பெண் மக்கள் காதலை
ஆண் மக்கள் நாடியே
மணமாலை சூடிடும்
மேடையைத் தேடியே

பெண் : பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்
வந்தார் வந்தாரே….
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here