Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Mayavanathan

Female : Pennin perumaiyae perumai
Pennin perumaiyae perumai
Anbudan panbum aasaiyum paasamum
Anbudan panbum aasaiyum paasamum
Azhagum gunamum iyarkkaiyil amaindha
Pennin perumaiyae perumai

Female : Aandavan ulagathai padaithu vittan
Andrudan paniyai mudithu kondaan
Aandavan ulagathai padaithu vittan
Andrudan paniyai mudithu kondaan
Avan padaitha ulagathai kaathidavae
Padaitha ulagathai kaathidavae
Panbulla pennai anuppi veithaan
Pennin perumaiyae perumai

Female : Mangala ninaivugal manadhinil malarga
Manjal kungumam manaiyinil vaazhga
Mangala ninaivugal manadhinil malarga
Manjal kungumam manaiyinil vaazhga
Nenjin kanivu kangalil vilanga
Nenjin kanivu kangalil vilanga
Nettriyil thilagam azhagudan thulangum
Pennin perumaiyae perumai

Female : Pirandha veetin per vilanga
Nee puguntha veettil vaazhndhiduga
Pirandha veetin per vilanga
Nee puguntha veettil vaazhndhiduga
Indha arivurai thaan en seervarisai
Arivurai thaan en seervarisai
Idhai peruvadhu thaan un kula perumai

Female : Pennin perumaiyae perumai
Anbudan panbum aasaiyum paasamum
Azhagum gunamum iyarkkaiyil amaindha
Pennin perumaiyae perumai
Tamil pennin perumaiyae perumai

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : மாயவநாதன்

பெண் : பெண்ணின் பெருமையே பெருமை
பெண்ணின் பெருமையே பெருமை
அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும்
அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும்
அழகும் குணமும் இயற்கையில் அமைந்த
பெண்ணின் பெருமையே பெருமை….

பெண் : ஆண்டவன் உலகத்தை படைத்துவிட்டான்
அன்றுடன் பணியை முடித்துக் கொண்டான்
ஆண்டவன் உலகத்தை படைத்துவிட்டான்
அன்றுடன் பணியை முடித்துக் கொண்டான்
அவன் படைத்த உலகத்தை காத்திடவே
படைத்த உலகத்தை காத்திடவே
பண்புள்ள பெண்ணை அனுப்பி வைத்தான்
பெண்ணின் பெருமையே பெருமை….

பெண் : மங்கல நினைவுகள் மனதினில் மலர்க
மஞ்சள் குங்குமம் மனையினில் வாழ்க
மங்கல நினைவுகள் மனதினில் மலர்க
மஞ்சள் குங்குமம் மனையினில் வாழ்க
நெஞ்சின் கனிவு கண்களில் விளங்க
நெஞ்சின் கனிவு கண்களில் விளங்க
நெற்றியில் திலகம் அழகுடன் துலங்கும்
பெண்ணின் பெருமையே பெருமை….

பெண் : பிறந்த வீட்டின் பேர் விளங்க நீ
புகுந்த வீட்டில் வாழ்ந்திடுக
பிறந்த வீட்டின் பேர் விளங்க நீ
புகுந்த வீட்டில் வாழ்ந்திடுக
இந்த அறிவுரைதான் என் சீர்வரிசை
அறிவுரைதான் என் சீர்வரிசை
இதை பெறுவதுதான் உன் குலப்பெருமை

பெண் : பெண்ணின் பெருமையே பெருமை
அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும்
அழகும் குணமும் இயற்கையில் அமைந்த
பெண்ணின் பெருமையே பெருமை….
தமிழ் பெண்ணின் பெருமையே பெருமை….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here