Singer : Madhu Balakrishnan

Music by : Vidyasagar

Male : Pesaaa madanthaiyae
Vizhi pesum chithiramae
Selai kuzhanthaiyae
En chella kalavaramae

Male : Idhayamennum poo parithen
Narambu kondu saram thoduthen
Kaiyil koduthen kannae
Nee kaalil midhithaai pennae

Male : Pesaaa madanthaiyae
Vizhi pesum chithiramae
Selai kuzhanthaiyae
En chella kalavaramae

Male : Ezhu nirangalai
Enni mudikkum mun
Vaanavil karainthathu paathiyilae
Marupadi thondruma paarvaiyilae

Male : Pennin mana nilai
Kandu theliyum mun
Vaazhkai mudinthathu kuzhappathilae
Vaanam nadungudhu mayakathilae

Male : Kaadhalai cholli karam kuvithen
Karuppukku pazhi endru kalangugiraai
Poojaikku unakku poo parithen
Pookkalin kolai endru nadungugiraai

Male : Vaarthaigalaal kaadhalithen
Jaadaigalaal saagadithaai
Mazhai thaan ketten pennae
Idi minnal thanthaai kannae

Male : Pesaaa madanthaiyae
Vizhi pesum chithiramae

Male : Moongil kaatilae
Theeyum azhaguthaan
Aanal adhai naan rasikkavillai
Ayyo idhayam porukkavillai

Male : Kobam moolgaiyil
Neeyum azhagu thaan
Aanal adhai naan sugikkavillai
Sagiyae en manam sagikka villai

Male : Un sinam kandu en idhayam
Udambukku veliyae thudikuthadi
Un manam irandaai udainthathendru
En manam naankaai udainthathadi

Male : Vidhai udainthaal chedi mulaikkum
Manam udainthaal pul mulaikkum
Thandanai enbadhu elithu
Un mounam vaalinum kodiyathu

Male : Pesaaa madanthaiyae
Vizhi pesum chithiramae
Selai kuzhanthaiyae
En chella kalavaramae

 

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

ஆண் : இதயமென்னும் பூ
பறித்தேன் நரம்பு கொண்டு
சரம் தொடுத்தேன் கையில்
கொடுத்தேன் கண்ணே நீ
காலில் மிதித்தாய் பெண்ணே

ஆண் : பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

ஆண் : ஏழு நிறங்களை
எண்ணி முடிக்கும் முன்
வானவில் கரைந்தது
பாதியிலே மறுபடி
தோன்றுமா பார்வையிலே

ஆண் : பெண்ணின் மனநிலை
கண்டு தெளியும் முன் வாழ்க்கை
முடிந்தது குழப்பத்திலே வானம்
நடுங்குது மயக்கத்திலே

ஆண் : காதலை சொல்லி
கரம் குவித்தேன் கருப்புக்கு
பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்கு பூ பறித்தேன்
பூக்களின் கொலை என்று
நடுங்குகிறாய்

ஆண் : வார்த்தைகளால்
காதலித்தேன் ஜாடைகளால்
சாகடித்தாய் மழை தான்
கேட்டேன் பெண்ணே இடி
மின்னல் தந்தாய் கண்ணே

ஆண் : பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே

ஆண் : மூங்கில் காட்டிலே
தீயும் அழகுதான் ஆனால்
அதை நான் ரசிக்கவில்லை
ஐயோ இதயம் பொறுக்கவில்லை

ஆண் : கோபம் மூழ்கையில்
நீயும் அழகுதான் ஆனால்
அதை நான் சுகிக்கவில்லை
சகியே என் மனம் சகிக்கவில்லை

ஆண் : உன் சினம் கண்டு
என் இதயம் உடம்புக்கு
வெளியே துடிக்குதடி உன்
மனம் இரண்டாய் உடைந்ததென்று
என் மனம் நான்காய் உடைந்ததடி

ஆண் : விதை உடைந்தால்
செடி முளைக்கும் மனம்
உடைந்தால் புல் முளைக்கும்
தண்டனை என்பது எளிது
உன் மௌனம் வாளினும்
கொடியது

ஆண் : பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here