Singer : Kalyani Nair

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Snehan

Female : Hmm mm mm …hmm mm mm …

Female : Pesaama pesum kannu
En kanna thinguthinnu
Unkitta sollathanae
Vaaren pinnaala

Female : Naathaaangi pottukittu
Na ninnan vetkappattu
Sattunnu odanchi ponen
Naane unnala

Female : Kalavaani payalonu
Thavaraaga nenachava naan thaan
Iravellam una kandu
Orangama thavichava naan thaan

Female : Un nenappu thaan madi neraya
Naa somakkuren yeno theriyala
Un mogatha thaan manasukkulla
Padamaa naa varancha

Female : Poo pookkura chedi pola
Naa sirikiren paakkum pozhuthula
Nee nadakkura paathayellam
Nizhala alaivenae

Female : Hmm mm mm …hmm mm mm …

Female : Thariyil potta noolattam
Aduren naanum karakattam
Sariya thavara theriyavilla
Paappom velllottam

Female : Maraththa paaththa kurangaattam
Unna paaththaa mana ottam
Thaththi thaavi suththi varudhe
Enna aarpattam

Female : Unnala noyali
Aanenae naan thaan
Noi theerkkum marunthaaga
Varuvaayaa neethanae

Female : En thanimayum azhagaga
Arangeruthae unnal thanae
Un parva padavenumnu
Pathari porenae

Female : Un kirukku en thalaikkera
Na varikkuthira pola aanae
En nelavaram kalavaramaaga
Maari poguthingae

Female : Hmm mm mm …hmm mm mm …

பாடகி : கல்யாணி நாயர்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண் : பேசாம பேசும் கண்ணு
என் கண்ண திங்குதின்னு
உங்கிட்ட சொல்லதானே
வாரேன் பின்னால

பெண் : நாதாங்கி போட்டுகிட்டு
நா நின்னேன் வெட்கப்பட்டு
சட்டுன்னு ஒடஞ்சி போனேன்
நானே உன்னால

பெண் : களவாணி பயலோனு
தவறாகா நெனச்சவ நான் தான்
இரவெல்லாம் உன கண்டு
உறங்காம தவிச்சவ நான் தான்

பெண் : உன் நெனப்பு தான் மடி நெறைய
நா சொமக்குறேன் ஏனோ தெரியல
உன் மொகத்த தான் மனசுக்குள்ள
படமா நா வரஞ்ச

பெண் : பூ பூக்குற செடி போல
நா சிரிக்கிறேன் பாக்கும் பொழுதுல
நீ நடக்குற பாதையெல்லாம்
நிழலா அலைவேனே

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண் : தறியில் போட்ட நூலாட்டம்
ஆடுறேன் நானும் கரகாட்டம்
சரியா தவறா தெரியவில்ல
பாப்போம் வெள்ளோட்டம்

பெண் : மரத்த பாத்த குரங்காட்டம்
உன்ன பாத்தா மன ஓட்டம்
தத்தி தாவி சுத்தி வருதே
என்ன ஆர்பாட்டம்

பெண் : உன்னால நோயாளி
ஆனேனே நான் தான்
நோய் தீர்க்கும் மருந்தாக
வருவாயா நீதானே

பெண் : என் தனிமையும் அழகா
அரங்கேறுதே உன்னால் தானே
உன் பார்வ படவேணும்னு
பதறி போறேனே

பெண் : உன் கிறுக்கேன் என் தலைக்கேற
நா வரிக்குதிர போல ஆனே
என் நெலவரம் கலவரமாக
மாறி போகுதிங்கே

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here