Singer : Unni Menon

Music by : S. A. Rajkumar

Male : Pethava kanneeru
Aaraaga oduthamma
Pethava kanneeru
Aaraaga oduthamma
Kuththanthaan senjaalum
Thavarethum illaiyamma

Male : Siragu koduthu vittu
Sarugaa karuguthamma
Thaai manna kaakka vittu
Thaai ullam poguthamma

Male : Thoppul kodi aruthavalae
Vittu sellum neramamma
Thottil sugam kaanaama
Pinju nenjam thavikkum amma

Male : Moochodu moochu onnu
Muzhusaa kalanthathamma
Munnooru yugathukkum thaan
Vaazhthu kidaikkum amma

Male : Manasu kalangaama
Manna vananguthamma
Kaadhal sarithiratha
Maatri ezhuthuthamma

Male : Uyira koduthaakka
Mannodu puthanjudunnu
Thannaiyae kodukkuthamma
Naattukkaaga kannipponnu

பாடகர் : உன்னி மேனன்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : பெத்தவ கண்ணீரு
ஆறாக ஓடுதம்மா
பெத்தவ கண்ணீரு
ஆறாக ஓடுதம்மா
குத்தந்தான் செஞ்சாலும்
தவறேதும் இல்லையம்மா

ஆண் : சிறகு கொடுத்து விட்டு
சருகா கருகுதம்மா
தாய் மண்ணை காக்க விட்டு
தாய் உள்ளம் போகுதம்மா

ஆண் : தொப்புள் கோடி அறுத்தவளே
விட்டுச் செல்லும் நேரம் அம்மா
தொட்டில் சுகம் காணாம
பிஞ்சு நெஞ்சம் தவிக்கும் அம்மா

ஆண் : மூச்சோடு மூச்சு ஒன்னு
முழுசா கலந்ததம்மா
முன்னூறு யுகத்துக்கும் தான்
வாழ்த்து கிடைக்கும் அம்மா

ஆண் : மனசு கலங்காம
மண்ணை வணங்குதம்மா
காதல் சரித்திரத்த
மாற்றி எழுதுதம்மா

ஆண் : உயிரை கொடுத்தாக்கா
மண்ணோடு புதஞ்சுடுன்னு
தன்னையே கொடுக்குதம்மா
நாட்டுக்காக கன்னிப் பொண்ணு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here