Singers : P. Susheela and Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female : Muthae maragadhamae

Female : Mukkaniyae sakkaraiyae

Female : Kothu marukkozhundhae

Female : Kodai palaa pazhamae

Female : Thathum kiliyae

Female : Thadaagathu thaamaraiyae

Female : Sandhana cholaiyae

Female : Saamandhi poo kaadae

Female : Vadakku pani malaiyae

Female : Pani malaiyin kulir kaattrae

Female : Kulir kaattril salasalakkum
Odai ilam thanneerae

Both : Kulam kaakka vandha engal
Komaganae thaalaelo thaalae thaalaelo

Female : Pillai kali theera
En pillai kali theera
Un annai vandhu serndhaal
Un annai kurai theera
Nee pinnae vandhu serndhaai

Female : Pillai kali theera
Un annai vandhu serndhaal
Un annai kurai theera
Nee pinnae vandhu serndhaai
Aariraari raaro aaraariraari raaro

Female : Nenjukku thaan theriyum
Adhu ninaithirundha neram

Female : Kannukku thaan theriyum
Adhu kaathirundha kaalam

Female : Nenjukku thaan theriyum
Adhu ninaithirundha neram

Female : Kannukku thaan theriyum
Adhu kaathirundha kaalam

Female : Pennukku thaan theriyum
Unnai sumandhirundha kolam
Pennukku thaan theriyum
Unnai sumandhirundha kolam

Female : Pillaikku thaan theriyum
Annai manadhil ulla paasam

Female : Pillai kali theera
En pillai kali theera
Un annai vandhu serndhaal
Un annai kurai theera
Nee pinnae vandhu serndhaai

Both : Aariraari raaro aaraariraari raaro

Female : Vaazhndha naalum ondru
Nee valarndha naalum ondru

Female : Sumandha naalum ondru
Paal surandha naalum ondru

Female : Vaazhndha naalum ondru
Nee valarndha naalum ondru

Female : Sumandha naalum ondru
Paal surandha naalum ondru

Female : Yaar eduthaal enna
Un thaayin manam menmai
Yaar eduthaal enna
Un thaayin manam menmai

Female : Yaar koduthaal enna
Kannae paalin niram venmai

Female : Sippi thandha muthu
Idhu dheivam thandha sothu
Unnai petreduthaal annai
Naan thatheduthaen unnai

Both : Aariraari raaro aaraariraari raaro
Aariraari raaro aaraariraari raaro
Aariraari raaro aaraariraari raaro

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : முத்தே மரகதமே

பெண் : முக்கனியே சர்க்கரையே

பெண் : கொத்து மருக்கொழுந்தே

பெண் : கோடை பலாப்பழமே

பெண் : தத்தும் கிளியே

பெண் : தடாகத்து தாமரையே

பெண் : சந்தன சோலையே

பெண் : சாமந்தி பூக்காடே

பெண் : வடக்கு பனிமலையே

பெண் : பனிமலையின் குளிர்க்காற்றே

பெண் : குளிர் காற்றில் சலசலக்கும்
ஓடை இளந்தண்ணீரே

இருவர் : குலம் காக்க வந்த எங்கள்
கோமகனே தாலேலோ தாலே தாலேலோ.

பெண் : பிள்ளைக்கலி தீர
என் பிள்ளைக்கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்

பெண் : பிள்ளைக் கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ

பெண் : நெஞ்சுக்குத்தான் தெரியும்
அது நினைத்திருந்த நேரம்

பெண் : கண்ணுக்குத்தான் தெரியும்
அது காத்திருந்த காலம்

பெண் : நெஞ்சுக்குத்தான் தெரியும்
அது நினைத்திருந்த நேரம்

பெண் : கண்ணுக்குத்தான் தெரியும்
அது காத்திருந்த காலம்

பெண் : பெண்ணுக்குத்தான் தெரியும்
உன்னை சுமந்திருந்த கோலம்
பெண்ணுக்குத்தான் தெரியும்
உன்னை சுமந்திருந்த கோலம்

பெண் : பிள்ளைக்குத்தான் தெரியும்
அன்னை மனதில் உள்ள பாசம்
பெண் : பிள்ளைக்கலி தீர
என் பிள்ளைக்கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
இருவர் : ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ

பெண் : வாழ்ந்த நாளும் ஒன்று
நீ வளந்த நாளும் ஒன்று

பெண் : சுமந்த நாளும் ஒன்று
பால் சுரந்த நாளும் ஒன்று

பெண் : வாழ்ந்த நாளும் ஒன்று
நீ வளந்த நாளும் ஒன்று

பெண் : சுமந்த நாளும் ஒன்று
பால் சுரந்த நாளும் ஒன்று

பெண் : யார் எடுத்தால் என்ன
உன் தாயின் மனம் மென்மை
யார் எடுத்தால் என்ன
உன் தாயின் மனம் மென்மை

பெண் : யார் கொடுத்தால் என்ன
கண்ணே பாலின் நிறம் வெண்மை

பெண் : சிப்பி தந்த முத்து
இது தெய்வம் தந்த சொத்து
உன்னை பெற்றெடுத்தாள் அன்னை
நான் தத்தெடுத்தேன் உன்னை

இருவர் : ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here