Singers : Seerkazhi Govindarajan, S. V. Ponnusami and P. Leela
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Male : ………………..
Male : Pillaiyaar appanae varuga
Aiyya varuga appa varuga
Naadagam pizhaiyindri nadaththi tharuga
Aamaa tharuga
Male : Vellaiyammaa….aa….aa….aa…
Vellaiyammaa tamil pillaiyammaa
Aval nalla kadhai neethiyulla kadhai
Chorus : Vellaiyammaa tamil pillaiyammaa
Aval nalla kadhai needhiyulla kadhai
Male : Naadagam podurom naangal adhai
Male : Pillaiyaar appanae varuga
Aiyya varuga appa varuga
Male : Maanae naan unnai adaiya
Enna thavam seithaen thullum vizhiyazhagu
Maanae naan unnai adaiya
Enna thavam seithaen
Female : Saami naan umai adaiya
Enna thavam saeithaen sunthara manigaraa
Saami naan umai adaiya
Enna thavam saeithaen
Female : Kaththu kadal thaandi nammai
Nakki uyir pizhaikka vantha
Parangi enum naaigal ingu thirala
Thalai parai arukka kaaikalena urula
Male : Kidukiduvena padai nadunga
Vedavedavena thodai nadunga
Kubukubuvena kuruthi vellam paayum
Female : Pogaathae pogaathae en kanavaa
Pollaatha soppanam naanum kandaen
Naanum pollaatha soppanam naanum kandaen
Male : Velanaiya vizhiyaalae veleduththu vaadi
Vaalanaiya vizhiyaalae vaaleduththu vaadi
Veleduththu vaaleduththu tholeduththu sooluraiththu
Porkalaththil vezhamena puguvaen
Male : Vettri maalai kondu naanum ingu varuvaen
Vettri vel veera vel
Chorus : Vettri vel veera vel
Vettri vel veera vel
Vettri vel veera vel
Male : Kelum thaayae thidukkidum saedhi
Ketpor nenjai nadukkidum saedhi
Kaali kovili nadakkum poril
Kaalai namathu vellaiyath devanai
Oolai narigal vaalai paaichchinar
Aiyako vaalai paaichchinar
Female : Aiyyo aththaan
Aththaan aththaan ennuyir aththaan
Engu neer sendreer
Male : Vaanagam sendraar unnuyir aththaan
Thenamuthae avar thirumbi vaaraar
Female : Aiyyo
Male : Kettathu iththudan kattabomman kudi
Vendrathu paaradi parangiyar thani kodi
Hahaa haahaa hahaa
Female : …………….
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்,
எஸ். வி. பொன்னுசாமி மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : …………………..
ஆண் : பிள்ளையார் அப்பனே வருக
அய்யா வருக அப்பா வருக
நாடகம் பிழையின்றி நடத்தி தருக…
ஆமா தருக
ஆண் : வெள்ளையம்மா……ஆ….ஆ….ஆ….
வெள்ளையம்மா தமிழ் பிள்ளையம்மா
அவள் நல்ல கதை நீதியுள்ள கதை
குழு : வெள்ளையம்மா தமிழ் பிள்ளையம்மா
அவள் நல்ல கதை நீதியுள்ள கதை
ஆண் : நாடகம் போடுறோம் நாங்கள் அதை
ஆண் : பிள்ளையார் அப்பனே வருக
ஐயா வருக அப்பா வருக
ஆண் : மானே நான் உன்னை அடைய
என்ன தவம் செய்தேன் துள்ளும் விழியழகு
மானே நான் உன்னை அடைய
என்ன தவம் செய்தேன்
பெண் : சாமி நான் உமை அடைய
என்ன தவம் செய்தேன் சுந்தர மனோகரா
சாமி நான் உமை அடைய
என்ன தவம் செய்தேன்
ஆண் : கத்துக் கடல் தாண்டி நம்மை
நக்கி உயிர் பிழைக்க வந்த
பறங்கி எனும் நாய்கள் இங்கு திரள
தலை பறை அறுக்க காய்களென உருள
ஆண் : கிடுகிடுவென படை நடுங்க
வெடவெடவென தொடை நடுங்க
குபுகுபுவென குருதி வெள்ளம் பாயும்
பெண் : போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்..
நானும் பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்..
ஆண் : வேலனைய விழியாளே வேலெடுத்து வாடி
வாளனைய விழியாளே வாளெடுத்து வாடி
வேலெடுத்து வாளெடுத்து தோளெடுத்து சூளுரைத்து
போர்க்களத்தில் வேழமென புகுவேன்
ஆண் : வெற்றி மாலை கொண்டு நானும் இங்கு வருவேன்
வெற்றி வேல் வீர வேல்
குழு : வெற்றி வேல் வீர வேல்
வெற்றி வேல் வீர வேல்
வெற்றி வேல் வீர வேல்
ஆண் : கேளும் தாயே திடுக்கிடும் சேதி
கேட்போர் நெஞ்சை நடுக்கிடும் சேதி
காளி கோவிலில் நடக்கும் போரில்
காளை நமது வெள்ளையத்தேவனை
ஊளை நரிகள் வாளைப் பாய்ச்சினர்
ஐயகோ வாளைப் பாய்ச்சினர்
பெண் : அய்யோ அத்தான்
அத்தான் அத்தான் என்னுயிர் அத்தான்
எங்கு நீர் சென்றீர்
ஆண் : வானகம் சென்றார் உன்னுயிர் அத்தான்
தேனமுதே அவர் திரும்பி வாரார்
பெண் : அய்யோ
ஆண் : கெட்டது இத்துடன் கட்டபொம்மன் குடி
வென்றது பாரடி பறங்கியர் தனிக் கொடி……
ஹஹா ஹஹா ஹஹா
பெண் : ………………….