Singer : Sid Sriram

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Yugabharathi

Male : Pinju pinju mazhai pesuvadhenna
Pillai pirai sollum seidhiyum enna
Annakodi aval aaduvadhennaa
Andhi pagal urumaaruvadhennaa

Male : Muthumani sudar modhuvadhennaa
Munnam seidha thavamo ena enna
Kannakkuzhi kadhai neeluvadhenna
Gangai nadhi nenjil oduvadhenna

Male : Paal mugam
Pagal iravaiyum mattruvadhenna
Pasunthalirena aakkuvadhenna
Kalangarai aval paarvaiyae

Male : Then mazhai dhinam dhinam
Ennai theenduvadhenna
Dhisai marandhida thoonduvadhenna
Kathir oli aval vaarthaiyae

Male : Pennalae boomiyum thondriyadhendru
Munnorgal varthaiyai kettadhu undu
En vaazhvil naan adhai
Paarthida poothaval en magalae

Male : Kannadi maaligai pol aval nindru
Kai neeti pesidum saayalai kandu
Odamalae uraivadhu enna kalangalae

Male : Magalae unnai paarkaiyil parappenae
Nizhalaai un madiyinil kidappenae
Un kai viralae oru thoorigaiyai
Theettidudhae ennai ooviyamaai

Male : Un idhazhgal pesidum pechchai
Imaikkul vaithu thaangiduven
Idhu podhum idhu podhum en magalae

Male : Pinju pinju mazhai pesuvadhenna
Pillai pirai sollum seidhiyum enna
Annakodi aval aaduvadhenna
Andhi pagal urumaaruvadhenna

Male : Muthumani sudar modhuvadhennaa
Munnam seidha thavamo ena enna
Kannakkuzhi kadhai neeluvadhennaa
Gangai nadhi nenjil oduvadhennaa

Male : Pennalae boomiyum thondriyadhendru
Munnorgal varthaiyai kettadhu undu
En vaazhvil naan adhai
Paarthida poothaval en magalae

Male : Kannadi maaligai pol aval nindru
Kai neeti pesidum saayalai kandu
Odamalae uraivadhu enna kalangalae

பாடகர் : சித்ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் உருமாறுவதென்ன

ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என எண்ண
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன

ஆண் : பால் முகம்
பகல் இரவையும் மாற்றுவதென்ன
பசுந்தளிரென ஆக்குவதென்ன
கலங்கரை அவள் பார்வையே

ஆண் : தேன் மழை
தினம் தினம் எனை தீண்டுவதென்ன
திசை மறந்திட தூங்குவதென்ன
கதிர் ஒளி அவள் வார்த்தையே

ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் அதை
பார்த்திட பூத்தவள் என் மகளே

ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே உறைவது என்ன காலங்களே

ஆண் : மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே
நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே
உன் கை விரலே ஒரு தூரிகையாய்
தீட்டிடுதே என்னை ஓவியமாய்

ஆண் : உன் இதழ்கள் பேசும் பேச்சை
இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்
இது போதும் இது போதும் என் மகளே

ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் உருமாறுவதென்ன

ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என எண்ண
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன

ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் அதை
பார்த்திட பூத்தவள் என் மகளே

ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே உறைவது என்ன காலங்களே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here