Singer : S. C. Krishnan

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Male : Piranthu vanthathum orae vazhi
Naam pirindhu povadhum orae vazhi
Piranthu vanthathum orae vazhi
Naam pirindhu povadhum orae vazhi
Varundhum thaayin vayitrinil pathu
Maadham irundhu boomiyil vilundhu
Piranthu vanthathum orae vazhi
Naam pirindhu povadhum orae vazhi

Male : Vaazhum kaalam siriyathendraalum
Manidhan ninaippadhu kodi vazhi
Vaazhum kaalam siriyathendraalum
Manidhan ninaippadhu kodi vazhi
Avan manam pol nadappathu paadhi vazhi
Dhinam soozhum kavalaiyum yekkamum avanai
Suttri iruppadhu meedhi vazhi
Adhil thunindhavan kandathum needhi vazhi

Male : Piranthu vanthathum orae vazhi
Naam pirindhu povadhum orae vazhi

Male : Oruvarai oruvar unarndhu kondaal
Avar ullangal kaanbathu orae vazhi
Oruvarai oruvar unarndhu kondaal
Avar ullangal kaanbathu orae vazhi
Adhu urumalum porumalum illa vazhi
Dhinam unmaiyai poiyai arindhu kolladhavarukku
Vovvoru vazhiyum thunba vazhi
Avar urangi saavadhae nalla vazhi

Male : Piranthu vanthathum orae vazhi
Naam pirindhu povadhum orae vazhi

Male : Kondavaludanae kudumbam nadathuvon
Kolgaiyum vaazhvum oraevazhi
Kondavaludanae kudumbam nadathuvon
Kolgaiyum vaazhvum oraevazhi
Kanda pengalai kanakku pannuvon
Kanda pengalai kanakku pannuvon
Karuthil iruppadhu veru vazhi
Indha kanakkinil laabam mudhugu vali

Male : Haa..piranthu vanthathum orae vazhi
Naam pirindhu povadhum orae vazhi

Male : Avaniyai padaithathum
Payirgalai padaithathum
Aandavan vagutha orae vazhi
Avaniyai padaithathum
Payirgalai padaithathum
Aandavan vagutha orae vazhi
Andha aandavanai thedi purapadum bakthargal
Andraadum povadhu veru vazhi
Aandavanai thedi purapadum bakthargal
Andraadum povadhu veru vazhi
Andraadum povadhu veru vazhi

Male : Piranthu vanthathum orae vazhi
Naam pirindhu povadhum orae vazhi

பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பிறந்து வந்ததும் ஒரே வழி
நாம் பிரிந்து போவதும் ஒரே வழி
பிறந்து வந்ததும் ஒரே வழி
நாம் பிரிந்து போவதும் ஒரே வழி
வருந்தும் தாயின் வயிற்றினில் பத்து
மாதம் இருந்து பூமியில் விழுந்து……
பிறந்து வந்ததும் ஒரே வழி
நாம் பிரிந்து போவதும் ஒரே வழி

ஆண் : வாழும் காலம் சிறியதென்றாலும்
மனிதன் நினைப்பது கோடி வழி
வாழும் காலம் சிறியதென்றாலும்
மனிதன் நினைப்பது கோடி வழி
அவன் மனம் போல் நடப்பது பாதி வழி
தினம் சூழும் கவலையும் ஏக்கமும் அவனைச்
சுற்றி இருப்பது மீதி வழி
அதில் துணிந்தவன் கண்டது நீதி வழி……

ஆண் : பிறந்து வந்ததும் ஒரே வழி
நாம் பிரிந்து போவதும் ஒரே வழி

ஆண் : ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
அவர் உள்ளங்கள் காண்பது ஒரே வழி
ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
அவர் உள்ளங்கள் காண்பது ஒரே வழி
அது உறுமலும் பொறுமலும் இல்லா வழி
தினம் உண்மையைப் பொய்யை அறிந்து கொள்ளாதவர்க்கு
ஒவ்வொரு வழியும் துன்ப வழி
அவர் உறங்கிச் சாவதே நல்ல வழி…….

ஆண் : பிறந்து வந்ததும் ஒரே வழி
நாம் பிரிந்து போவதும் ஒரே வழி

ஆண் : கொண்டவளுடனே குடும்பம் நடத்துவோன்
கொள்கையும் வாழ்வும் ஒரே வழி
கொண்டவளுடனே குடும்பம் நடத்துவோன்
கொள்கையும் வாழ்வும் ஒரே வழி
கண்ட பெண்களைக் கணக்குப் பண்ணுவோன்
கண்ட பெண்களைக் கணக்குப் பண்ணுவோன்
கருத்திலிருப்பது வேறு வழி
இந்தக் கணக்கினில் லாபம் முதுகு வலி……

ஆண் : ஹா …பிறந்து வந்ததும் ஒரே வழி
நாம் பிரிந்து போவதும் ஒரே வழி

ஆண் : அவனியைப் படைத்ததும்
பயிர்களைப் படைத்ததும்
ஆண்டவன் வகுத்த ஒரே வழி
அவனியைப் படைத்ததும்
பயிர்களைப் படைத்ததும்
ஆண்டவன் வகுத்த ஒரே வழி
அந்தஆண்டவனைத் தேடித் புறப்படும் பக்தர்கள்
அன்றாடம் போவது வேறு வழி
அந்தஆண்டவனைத் தேடித் புறப்படும் பக்தர்கள்
அன்றாடம் போவது வேறு வழி
அன்றாடம் போவது வேறு வழி……

ஆண் : பிறந்து வந்ததும் ஒரே வழி
நாம் பிரிந்து போவதும் ஒரே வழி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here