Singer : P. Susheela

Music by : G. K. Venkatesh

Lyrics by : Vaali

Female : Piriyaavidai meendum vanthathu velai
Andrum idhayam azhuthathammaa
Indrum edhaiyo izhanthathammaa
Piriyaavidai…..piriyaavidai….

Female : Piriyaavidai vanthathu pillaigalae azhuvathenna
Niraintha vayathu varai vazhnthu vanthaen
Enthan nizhalilae ummai valarththu vanthaen
Peranai kannaal paarthuvittaen
Antha perumaiyilae kannai moodivittaen

Female : Mudinthathu kanakku kanneer edharkku
Mudinthathu vazhakku kavalaigal edharkku
Kannan perarul kidaiththathu enakku
Kangala thudaiththu kaariyam nadaththu

Female : Pachchai nilam pol vazhnthaval annai
Pasumai valampol valarvathu thaaimai
Piranthavai ellaam maraivathu thinnam
Marainthavai meendum varuvathu thinnam

Female : Kaalaththinaalae ndanthathai maranthu
Naalaiya ulagam namakkena vaazhga
Indrum varuvaen naalaiyum varuvaen
Thendral polae naan thinam varuvaen

Female : Anbai valarththu panpaadu kandu
Uravinai potri oru dheepam yaettri
Ottrumaiyaaga vaazhga ulagam pottrida vaazhga
Piriyaavidai…..piriyaavidai….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பிரியாவிடை மீண்டும் வந்தது வேளை
அன்றும் இதயம் அழுததம்மா
இன்றும் எதையோ இழந்ததம்மா
பிரியாவிடை……….பிரியாவிடை……..

பெண் : பிரியாவிடை வந்தது பிள்ளைகளே அழுவதென்ன
நிறைந்த வயது வரை வாழ்ந்து வந்தேன்
எந்தன் நிழலிலே உம்மை வளர்த்து வந்தேன்
பேரனைக் கண்ணால் பார்த்துவிட்டேன்
அந்த பெருமையிலே கண்ணை மூடி விட்டேன்

பெண் : முடிந்தது கணக்கு கண்ணீர் எதற்கு
முடிந்தது வழக்கு கவலைகள் எதற்கு
கண்ணன் பேரருள் கிடைத்தது எனக்கு
கண்களை துடைத்து காரியம் நடத்து

பெண் : பச்சை நிலம் போல் வாழ்ந்தவள் அன்னை
பசுமை வளம்போல் வளர்வது தாய்மை
பிறந்தவை எல்லாம் மறைவது திண்ணம்
மறைந்தவை மீண்டும் வருவது திண்ணம்

பெண் : காலத்தினாலே நடந்ததை மறந்து
நாளைய உலகம் நமக்கென வாழ்க
இன்றும் வருவேன் நாளையும் வருவேன்
தென்றல் போலே நான் தினம் வருவேன்

பெண் : அன்பை வளர்த்து பண்பாடு கண்டு
உறவினை போற்றி ஒரு தீபம் ஏற்றி
ஒற்றுமையாக வாழ்க உலகம் போற்றிட வாழ்க
பிரியாவிடை……….பிரியாவிடை……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here