Singers : T. K. Kala and K. J. Yesudas

Music by : K. V. Mahadevan

Female : Poi vaa… nadhiyalaiyae…
Ival poo choodum naal paarthu vaa…

Male : Vaa vaa… nadhiyalaiyae…
Ezhai boomikku neer kondu vaa…

Female : Poi vaa… nadhiyalaiyae…
Ival poo choodum naal paarthu vaa…
Poo choodum naal paarthu vaa

Male : Vaa vaa nadhiyalaiyae
Ezhai boomikku neer kondu vaa
Boomikku neer kondu vaa

Female : Kani thongum thottam
Mugam pootha kolam
Pani vaadai kaalam
Unai kaana vendum

Male : Nilavennum odam
Karai saerum neram
Mazhai koondhal oram
Ilaippaara vendum

Female : Idhu podhum endru thadumaari

Male : Idam maari maari sugam thaedi

Female : Idhu podhum endru thadumaari

Male : Idam maari maari sugam thaedi

Female : Aa… uravaadum podhu sari paadhi aagi

Male : Uyir kaanum inbam pala kodi

Female : Poi vaa nadhiyalaiyae
Ival poo choodum naal paarthu vaa
Poo choodum naal paarthu vaa

Male : Vaa vaa nadhiyalaiyae
Ezhai boomikku neer kondu vaa
Boomikku neer kondu vaa

Female : Nurai poovai alli
Alai sindha vendum
Alai meedhu konjam
Thalai saaya vendum

Male : Vasandhathai vendru
Varum unnai kandu
Mazhai villil vannam
Varaigindra vaanam

Female : Medhuvaaga vandhu idhazh modhi

Male : Padhamaaga anbu nadhiyodi

Female : Medhuvaaga vandhu idhazh modhi

Male : Padhamaaga anbu nadhiyodi

Female : Aa… mana medai kandu
Pudhu maalai soodi

Male : Kula mangai vaazhga nalam paadi

Male : Vaa vaa… nadhiyalaiyae
Ezhai boomikku neer kondu vaa
Female : Poo choodum naal paarthu vaa
Male : Boomikku neer kondu vaa
Female : Poo choodum naal paarthu vaa

பாடகர்கள் : டி. கே. கலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : போய் வா……நதியலையே ……
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா…..

ஆண் : வா….. வா….. நதியலையே …….
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

பெண் : போய் வா……நதியலையே ……
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா…..
பூச்சூடும் நாள் பார்த்து வா

ஆண் : வா….. வா….. நதியலையே …….
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூமிக்கு நீர் கொண்டு வா

பெண் : கனி தூங்கும் தோட்டம்
முகம் போட்ட கோலம்
பனி வாடை காலம்
உனை காண வேண்டும்

ஆண் : நிலவென்னும் ஓடம்
கரை சேரும் நேரம்
மழை கூந்தல் ஓரம்
இளைப்பாற வேண்டும்

பெண் : இது போதும் என்று தடுமாறி

ஆண் : இடம் மாறி மாறி சுகம் தேடி

பெண் : இது போதும் என்று தடுமாறி

ஆண் : இடம் மாறி மாறி சுகம் தேடி

பெண் : ஆ…….உறவாடும் போது சரிபாதி ஆகி

ஆண் : உயிர் காணும் இன்பம் பல கோடி

பெண் : போய் வா……நதியலையே ……
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா…..
பூச்சூடும் நாள் பார்த்து வா

ஆண் : வா….. வா….. நதியலையே …….
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூமிக்கு நீர் கொண்டு வா

பெண் : நுரை பூவை அள்ளி
அலை சிந்த வேண்டும்
அலை மீது கொஞ்சம்
தலை சாய வேண்டும்

ஆண் : வசந்தத்தை வென்று
வரும் உன்னை கண்டு
மழை வில்லில் வண்ணம்
வரைகின்ற வானம்

பெண் : மெதுவாக வந்து இதழ் மோதி

ஆண் : பதமாக அன்பு நதியோடி

பெண் : மெதுவாக வந்து இதழ் மோதி

ஆண் : பதமாக அன்பு நதியோடி

பெண் : ஆ…..மண மேடை கண்டு
புது மாலை சூடி

ஆண் : குல மங்கை வாழ நலம் பாடி

ஆண் : வா….. வா….. நதியலையே …….
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பெண் : பூச்சூடும் நாள் பார்த்து வா
ஆண் : பூமிக்கு நீர் கொண்டு வா
பெண் : பூச்சூடும் நாள் பார்த்து வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here