Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Ponnaa illai poovaa
Kannaa illai meena
Pottu vacha kattazhagu katti vacha mottazhagu
Muthu muthu pallazhagu moodi vacha munnazhagu
Thantha pasi theeraathu summaa
Male : Pottu vacha kattazhagu katti vacha mottazhagu
Muthu muthu pallazhagu moodi vacha munnazhagu
Thantha pasi theeraathu summaa
Male : Ponnaa illai poovaa
Kannaa illai meena
Male : Manjalukku vereduththu vantha mugam intha mugam
Maamalaiyil pooveduththu vantha manam intha manam
Manjalukku vereduththu vantha mugam intha mugam
Maamalaiyil pooveduththu vantha manam intha manam
Male : Un pattu vanna kannam rendum minnuthadi
Mann thottu konda koondhal ennai pinnuthadi
Un paththu viral muththamida solluthadi
En aththai magal yaarumenakkillaiyadi
Male : Ponnaa illai poovaa
Kannaa illai meena
Male : Thogaiyondru vanthathendru megamellaam kooduthadi
Soppanangal kandathupol thegamellaam aaduthadi
Nee vetti vetti pesuvathu sorkkamadi
Kai thatti vittu oduvathu vetkamadi
Un chinna chinna ponnidhazhil machamadi
Naan enna enna ennam mattum michamadi
Male : Ponnaa illai poovaa
Kannaa illai meena
Male : Oodaiyilae vellamellaam
Unaikkandu sokkuthadi
Odugindra maangalellaam achamuttru nikkuthadi
Nee thaththi thaththi sellugindra pachaikkili
En thanga kaiyil thulli vizhum ichai kili
En ullamellaam kallathanam ponguthadi
Antha vellaththilum pillai gunam thaanguthadi adi vaayaadi…
Male : Ponnaa illai poovaa
Kannaa illai meena
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பொண்ணா இல்லை பூவா
கண்ணா இல்லை மீனா
பொட்டு வச்ச கட்டழகு கட்டி வச்ச மொட்டழகு
முத்து முத்து பல்லழகு மூடி வச்ச முன்னழகு
தந்த பசி தீராது சும்மா………..
ஆண் : பொட்டு வச்ச கட்டழகு கட்டி வச்ச மொட்டழகு
முத்து முத்து பல்லழகு மூடி வச்ச முன்னழகு
தந்த பசி தீராது சும்மா………..
ஆண் : பொண்ணா இல்லை பூவா
கண்ணா இல்லை மீனா
ஆண் : மஞ்சளுக்கு வேரெடுத்து வந்த முகம் இந்த முகம்
மாமலையில் பூவெடுத்து வந்த மனம் இந்த மனம்
மஞ்சளுக்கு வேரெடுத்து வந்த முகம் இந்த முகம்
மாமலையில் பூவெடுத்து வந்த மனம் இந்த மனம்
ஆண் : உன் பட்டு வண்ணக் கன்னம் ரெண்டும் மின்னுதடி
மண் தொட்டுக் கொண்ட கூந்தல் என்னைப் பின்னுதடி
உன் பத்து விரல் முத்தமிடச் சொல்லுதடி
என் அத்தை மகள் யாருமெனக்கில்லையடி……….
ஆண் : பொண்ணா இல்லை பூவா
கண்ணா இல்லை மீனா
ஆண் : தோகையொன்று வந்ததென்று மேகமெல்லாம்
கூடுதடி
சொப்பனங்கள் கண்டதுபோல் தேகமெல்லாம் ஆடுதடி
நீ வெட்டி வெட்டிப் பேசுவது சொர்க்கமடி
கை தட்டி விட்டு ஓடுவது வெட்கமடி
உன் சின்னச் சின்னப் பொன்னிதழில் மச்சமடி
நான் எண்ண எண்ண எண்ணம் மட்டும் மிச்சமடி……
ஆண் : பொண்ணா இல்லை பூவா
கண்ணா இல்லை மீனா
ஆண் : ஓடையிலே வெள்ளமெல்லாம்
உனைக்கண்டு சொக்குதடி
ஓடுகின்ற மான்களெல்லாம் அச்சமுற்று நிக்குதடி
நீ தத்தித் தத்திச் செல்லுகின்ற பச்சைக்கிளி
என் தங்கக் கையில் துள்ளி விழும் இச்சைக் கிளி
என் உள்ளமெல்லாம் கள்ளத்தனம் பொங்குதடி
அந்த வெள்ளத்திலும் பிள்ளைக் குணம் தங்குதடி அடி
வாயாடி……
ஆண் : பொண்ணா இல்லை பூவா
கண்ணா இல்லை மீனா