Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Ponnukkenna azhagu
Female : Aaha haa haa hmm
Male : Poovukenna perumai
Female : Aaha haa haa hmm
Male : Ponnukkenna azhagu
Female : Aaha haa haa hmm
Male : Poovukenna perumai
Female : Aaha haa haa hmm
Male : Un kann ezhuthum tamizh kolangal
Pothaavo Vannakkiliyae
Male : Ponnukkenna azhagu
Poovukenna perumai
Male : Oru porul marai porul
Vivarikkum ilakkiyamae
Udanpattu thunai nindru
Sugam tharum ilakkanamae
Male : Oru porul marai porul
Vivarikkum ilakkiyamae
Udanpattu thunai nindru
Sugam tharum ilakkanamae
Male : Edhugaiyil un mugam
Female : Monaiyil un mugam
Male : Ponnukkenna azhagu
Female : Aaha haa haa hmm
Male : Poovukenna perumai
Female : Aaha haa haa hmm
Male : Ponnukkenna azhagu
Poovukenna perumai
Male : Kamba rasa kinnam adhilae
Katti vella kannam
Kaama devan vaaganangal
Kaattrilae aaduthae….ae….
Female : Cheran magal vanji edhirae
Senai kandu anji
Kadhal devan maarbin meedhu
Kaavalai theduthae….yae….
Male : Minnum neelamani pol
Indru en mael aadi kannae
Female : Innum enna yaekkam
Inba vannam paadu kannaa
Male : Ponnukkenna azhagu
Female : Aaha haa haa hmm
Male : Poovukenna perumai
Female : Aaha haa haa hmm
Female : Aasaiyulla panthu isaikkum
Osaiyull sindhu
Anthi veyil manjal maeni
Ennavo theduthae
Male : Naalu pakkam kootti idaiyil
Naana kalai kaatti
Kanni maadam thantha vegam
Engaengo poguthae
Female : Ondrae kaana vendum
Adhai nandrae kaana vendum
Male : Nandrae kaana vendum
Adhai indrae kaana vendum
Male : Ponnukkenna azhagu
Female : Aaha haa haa hmm
Male : Poovukenna perumai
Female : Aaha haa haa…..
Male : Un kann ezhuthum tamizh kolangal
Pothaavo Vannakkiliyae
Both : Ponnukkenna azhagu
Poovukenna perumai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பொண்ணுக்கென்ன அழகு
பெண் : ஆஹ ஹா ஹா ஹிம்ம்
ஆண் : பூவுக்கென்ன பெருமை
பெண் : ஆஹ ஹா ஹா ஹிம்ம்
ஆண் : பொண்ணுக்கென்ன அழகு
பெண் : ஆஹ ஹா ஹா……
ஆண் : பூவுக்கென்ன பெருமை
பெண் : ஆஹ ஹா ஹா…….
ஆண் : உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள்
போதாவோ வண்ணக் கிளியே
ஆண் : பொண்ணுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை
ஆண் : ஒரு பொருள் மறைப் பொருள்
விவரிக்கும் இலக்கியமே
உடன்பட்டு துணை நின்று
சுகம் தரும் இலக்கணமே
ஆண் : ஒரு பொருள் மறைப் பொருள்
விவரிக்கும் இலக்கியமே
உடன்பட்டு துணை நின்று
சுகம் தரும் இலக்கணமே
ஆண் : எதுகையில் உன் முகம்
பெண் : மோனையில் உன் முகம்
பெண் : பொண்ணுக்கென்ன அழகு
ஆண் : ஆஹ ஹா ஹா……
பெண் : பூவுக்கென்ன பெருமை
ஆண் : ஆஹ ஹா ஹா…….
பெண் : பொண்ணுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை
ஆண் : கம்ப ரசக் கிண்ணம் அதிலே
கட்டி வெல்லக் கன்னம்
காம தேவன் வாகனங்கள்
காற்றிலே ஆடுதே…….ஏ…..
பெண் : சேரன் மகள் வஞ்சி எதிரே
சேனைக் கண்டு அஞ்சி
காதல் தேவன் மார்பின் மீது
காவலைத் தேடுதே…….ஏ…..
ஆண் : மின்னும் நீலமணி போல்
இன்று என் மேல் ஆடு கண்ணே
பெண் : இன்னும் என்ன ஏக்கம்
இன்ப வண்ணம் பாடு கண்ணா
ஆண் : பொண்ணுக்கென்ன அழகு
பெண் : ஆஹ ஹா ஹா……
ஆண் : பூவுக்கென்ன பெருமை
பெண் : ஆஹ ஹா ஹா…….
பெண் : ஆசையுள்ள பந்து இசைக்கும்
ஓசையுள்ள சிந்து
அந்தி வெயில் மஞ்சள் மேனி
என்னவோ தேடுதே
ஆண் : நாலு பக்கம் கூட்டி இடையில்
நாணக் கலை காட்டி
கன்னி மாடம் தந்த வேகம்
எங்கெங்கோ போகுதே
பெண் : ஒன்றே காண வேண்டும்
அதை நன்றே காண வேண்டும்
ஆண் : நன்றே காண வேண்டும்
அதை இன்றே காண வேண்டும்
ஆண் : பொண்ணுக்கென்ன அழகு
பெண் : ஆஹ ஹா ஹா……
ஆண் : பூவுக்கென்ன பெருமை
பெண் : ஆஹ ஹா ஹா…….
ஆண் : உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள்
போதாவோ வண்ணக் கிளியே
இருவர் : பொண்ணுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை