Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Ponnulagam vanthaalum
Ennulagam unnudanae
Neeyae en ullaththin raagam
Neeyae en penmaikku naatham
Neeyae en rajanga vedham
Yaar arivaar yaar arivaar yaar arivaar…

Female : Manitha kulam muzhuthum erumbu
Naan palarum virumbugindra karumbu
Manitha kulam muzhuthum erumbu
Naan palarum virumbugindra karumbu
Ulagam unathadiyil thurumbu naan
Unathu kodi valarththa arumbu

Female : Maalai soodavo manjal poosavo
Thaali kollavo yogam illaiyae

Female : Ponnulagam vanthaalum
Ennulagam unnudanae

Female : Manaivi ena ninaikkum ninaippu
Manaivi ena ninaikkum ninaippu
Manathil adhu inikkum inippu
Veliyil adhai uraikka thudippu
Enakku yaedhu antha madhippu

Female : Mogam kollalaam pogam kaanalaam
Thaaram aagavae kaalamillaiyae

Female : Ponnulagam vanthaalum
Ennulagam unnudanae
Neeyae en ullaththin raagam
Neeyae en penmaikku naatham
Neeyae en rajanga vedham
Yaar arivaar yaar arivaar yaar arivaar…

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பொன்னுலகம் வந்தாலும்
என்னுலகம் உன்னுடனே
நீயே என் உள்ளத்தின் ராகம்
நீயே என் பெண்மைக்கு நாதம்
நீயே என் ராஜாங்க வேதம்
யார் அறிவார் யார் அறிவார் யார் அறிவார்….

பெண் : மனித குலம் முழுதும் எறும்பு
நான் பலரும் விரும்புகின்ற கரும்பு
னித குலம் முழுதும் எறும்பு
நான் பலரும் விரும்புகின்ற கரும்பு
உலகம் உனதடியில் துரும்பு நான்
உனது கொடி வளர்த்த அரும்பு

பெண் : மாலை சூடவோ மஞ்சள் பூசவோ
தாலிக் கொள்ளவோ யோகம் இல்லையே

பெண் : பொன்னுலகம் வந்தாலும்
என்னுலகம் உன்னுடனே

பெண் : மனைவி என நினைக்கும் நினைப்பு
மனைவி என நினைக்கும் நினைப்பு
மனதில் அது இனிக்கும் இனிப்பு
வெளியில் அதை உரைக்க துடிப்பு
எனக்கு ஏது அந்த மதிப்பு

பெண் : மோகம் கொள்ளலாம் போகம் காணலாம்
தாரம் ஆகவே காலமில்லையே

பெண் : பொன்னுலகம் வந்தாலும்
என்னுலகம் உன்னுடனே
நீயே என் உள்ளத்தின் ராகம்
நீயே என் பெண்மைக்கு நாதம்
நீயே என் ராஜாங்க வேதம்
யார் அறிவார் யார் அறிவார் யார் அறிவார்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here