Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Poo mudippaal indha poonguzhali
Pudhu cheer peruvaal vanna thaenaruvi

Male : Poo mudippaal indha poonguzhali
Pudhu cheer peruvaal vanna thaenaruvi
Paarvaiyilae mannan per ezhudhi
Paarvaiyilae mannan per ezhudhi
Adhai paarthirukkum kannil neer ezhudhi
Adhai paarthirukkum kannil neer ezhudhi

Male : Poo mudippaal indha poonguzhali
Pudhu cheer peruvaal vanna thaenaruvi

Male : Ponmani kangalil anjanam theetti
Poovaiyin annan kai valai pootti
Ponmani kangalil anjanam theetti
Poovaiyin annan kai valai pootti
Thaai vazhiyae vandha naanathai kaatti
Thaai vazhiyae vandha naanathai kaatti
Thaan varuvaal mangai mangalam sootti
Thaan varuvaal mangai mangalam sootti

Male : Poo mudippaal indha poonguzhali
Pudhu cheer peruvaal vanna thaenaruvi

Male : Nigazhum paarthiba aandu
Aavani thingal irubadhaam naal…
Thiruvalar chelvan sivaraamanukkum
Thiruvalar chelvi raajaeswarikkum
Nadai perum thirumanathirukku
Sutram soozha vandhirundhu
Vaazhthi arula vaendugiren…
Thangal nal varavai virumbum
Raguraaman raguraaman raguraaman…

Male : Maadharaar thangal magal endru
Paarthirukka…
Maappillai mun vandhu manavaraiyl kaathirukka…
Kaadhalaal mella kaal paarthu nadandhu vara…
Kanni aval kaiyil katti vaitha maalai thara…
Kaalai thirukkarathil kanaga mani charam edukka…
Aanandham paadu yena aandror kural pirakka…
Kottiyadhu melam… kuvindhadhu kodi malar…
Kattinaan maangalyam…
Manai vaazhga thunai vaazhga kulam vaazhga…

Male : Kaithalam thandhen en kanmani vaazhga
Kadamai mudindhadhu kalyaanam aaga

Male : Kaithalam thandhen en kanmani vaazhga
Kadamai mudindhadhu kalyaanam aaga
Adaikkalam nee endru vandhanal vaazha
Adaikkalam nee endru vandhanal vaazha
Aandavan pol unnai koyil kondaada

Male : Poo mudippaal indha poonguzhali
Pudhu cheer peruvaal vanna thaenaruvi
En paarvaiyilae undhan per ezhudhi
Adhai paarthirukkum kannil neer ezhudhi
Kannil neer ezhudhi kannil neer ezhudhi…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

ஆண் : பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி

ஆண் : பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

ஆண் : பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி

ஆண் : பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

ஆண் : நிகழும் பார்த்திப ஆண்டு
ஆவணித் திங்கள் இருபதாம் நாள்…
திருவளர் செல்வன் சிவராமனுக்கும்
திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்
நடைபெறும் திருமணத்திற்கு
சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்
தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன் ரகுராமன் ரகுராமன்……

ஆண் : மாதரார் தங்கள் மகளென்று
பார்த்திருக்க
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர…
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க…
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க
கொட்டியது மேளம் குவிந்தது கோடி மலர்
கட்டினான் மாங்கல்யம்
மனை வாழ்க துணை வாழ்க குலம் வாழ்க…

ஆண் : கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக

ஆண் : கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

ஆண் : பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி…. கண்ணில் நீரெழுதி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here