Singers : Jayachandran and Sunandha

Music by : Ilayaraja

Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa
Punnagaiyil paattezhuthum vanna puraa
Theerththa karaiyinil kadhal mayakkangal
Theerum varaiyinil pudhu vasantha vizha

Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa
Female : Punnagaiyil paattezhuthum vanna puraa

Chorus : Maangalyam thanthunaanae
Mama jeevana haethunaa
Kanndae pathnaami subaagae
Thavam sanjeeva saratha satham…

Male : Meettaamal ponaal mani veenai vaadum
Kai theendinaal thaan kalayaani paadum
Female : Ezhuthaatha pudhu ilakkiyam
Uyir kadhalil vilaiyum
Idhazhodu idhazh inainthida
Isai kolangal varaiyum

Male : Melam muzhangavum maalai vazhangavum
Velai varugaiyilae
Female : Paayai viriththidum paattu padiththidum
Kaana karunguyilae
Male : Aasai kulaththinil neenthi kulikkaiyil
Anantha poojai thodangumo

Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa
Female : Punnagaiyil paattezhuthum vanna puraa
Male : Theerththa karaiyinil kadhal mayakkangal
Theerum varaiyinil pudhu vasantha vizha

Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa
Female : Punnagaiyil paattezhuthum vanna puraa

Chorus : …………..

Female : Kasthoori maanai kadan kettu vaangi
Naan konda kangal naalaachchu thoongi
Male : Niruththaamal malar kanaigalai
Vidum vaalipam idhuthaan
Arangera dhinam iravinil varum
Naadagam idhuthaan

Female : Pillai piranthathu palliyarai konjam
Moodi kidakkattum
Male : Kattil oru puram thottil oru puram
Aadi kidakkattum
Female : Moochu irukkindra kaalam varaiyinil
Mogaththin vegam kuraiyumo

Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa
Female : Punnagaiyil paattezhuthum vanna puraa
Male : Theerththa karaiyinil kadhal mayakkangal
Theerum varaiyinil pudhu vasantha vizha

Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa
Female : Punnagaiyil paattezhuthum vanna puraa…

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா……

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

குழு : மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
த்வம் சஞ்சீவ சரத சதம்

ஆண் : மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்
கை தீண்டினால் தான் கல்யாணி பாடும்
பெண் : எழுதாத புது இலக்கியம்
உயிர்க் காதலில் விளையும்
இதழோடு இதழ் இணைந்திட
இசைக் கோலங்கள் வரையும்

ஆண் : மேளம் முழங்கவும் மாலை வழங்கவும்
வேளை வருகையிலே
பெண் : பாயை விரித்திடும் பாட்டுப் படித்திடும்
கானக் கருங்குயிலே
ஆண் : ஆசைக் குளத்தினில் நீந்திக் குளிக்கையில்
ஆனந்தப் பூஜை தொடங்குமோ…..

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
ஆண் : தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா……

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

குழு : ……………………

பெண் : கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி
நான் கொண்ட கண்கள் நாளாச்சு தூங்கி
ஆண் : நிறுத்தாமல் மலர்க் கணைகளை
விடும் வாலிபம் இதுதான்
அரங்கேற தினம் இரவினில் வரும்
நாடகம் இதுதான்

பெண் : பிள்ளை பிறந்தது பள்ளையறை கொஞ்சம்
மூடிக் கிடக்கட்டுமே
ஆண் : கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம்
ஆடிக் கிடக்கட்டுமே
பெண் : மூச்சு இருக்கின்ற காலம் வரையினில்
மோகத்தின் வேகம் குறையுமோ….

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
ஆண் : தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா……

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here