Singers : T. L. Maharajan and S. N. Surendar

Music by : Ilayaraja

Male : Ammaa arul koduthida
Kudiyiruppadhu
Sindhala karaiyae

Male : Ammaa unai ninaithida
Dhinam thudhithida
Ini illai kuraiyae

Male : Kulam vilanga nalam vilanga
Varum dhevi nee
Peyar vilanga pugazh vilangum
Perum jothi nee

Both : Poonthaeril yaeri varum kaali kaali
Poovodu yaendhi vandhom kaali kaali
Theeyorin paadhaikkoru vaeli vaeli
Nallorai kaatthirukkum sooli sooli
Paramaesvari buvanaesvari jegadheesvari
Raajaesvari maayaesvari yemai aadhari

Both : Poonthaeril yaeri varum kaali kaali
Poovodu yaendhi vandhom kaali kaali

Chorus : Poonthaeril yaeri varum kaali kaali
Poovodu yaendhi vandhom kaali kaali

Both : Mannavan uyirum chinnavan uyirum
Kaathu nirkkum kaarani

Chorus : Om… om…

Both : Andrum indrum endrum yemakku
Annam kodukkum poorani

Chorus : Om… om…

Both : Sooriyan vandhu chandhiran vandhu
Sutri thirivadhu yaaraalae
Kaarirul pola maegam thirandu
Maariyum vandhadhu yaaraalae
Unmai unarndhida buthiyai nee kodu
Unnai vanangida bakthiyai nee kodu
Andhari sundhari saundhariyae

Both : Poonthaeril yaeri varum kaali kaali
Poovodu yaendhi vandhom kaali kaali

Chorus : Poonthaeril yaeri varum kaali kaali
Poovodu yaendhi vandhom kaali kaali

Male : Manjalil undhan konjam konjumae
Muthu maari undhan paadham thanjamae

Chorus : Oo… oo… oo… oo…
Manjalil undhan konjam konjumae
Muthu maari undhan paadham thanjamae

Male : Yekkaalum vaazhum mukkaalam potrum
Vekkalaiyamman allavaa

Chorus : Yekkaalum vaazhum mukkaalam potrum
Vekkalaiyamman allavaa

Both : Kungumamae thandhiduvom
Mangalamae pongida vaa

Chorus : Kungumamae thandhiduvom
Mangalamae pongida vaa

Both : Paaradi paaradi bairaviyae bairaviyae

Chorus : Bairavi bairavi bairaviyae

Both : Thuyar theeradi theeradi ambigaiyae

Chorus : Ambigai ambigai ambigaiyae

Both : Kooradi kooradi arul mozhiyae
Arul mozhiyae

Chorus : Naanmuga naayagi naayagiyae

Both : Yemakkaaradi aaradi vazhi thunaiyae
Vazhi thunaiyae

Chorus : Theenthamizh paadidum umaiyavalae

Both : Vanjagarin nenjamellaam najirukkum manjamammaa
Pinju manam anjudhammaa unnidamae thanjamammaa
Naayagi narthagi naarani vaanmarai vaasagiyae…
Sankari saamalai sathiya saadhari saambaviyae…

பாடகர்கள் : டி. எல். மகாராஜன் மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அம்மா அருள் கொடுத்திட
குடியிருப்பது
சிந்தலக் கரையே

ஆண் : அம்மா உனை நினைத்திட
தினம் துதித்திட
இனி இல்லை குறையே

ஆண் : குலம் விளங்க நலம் விளங்க
வரும் தேவி நீ
பெயர் விளங்க புகழ் விளங்கும்
பெரும் ஜோதி நீ

இருவர் : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
தீயோரின் பாதைக்கொரு வேலி வேலி
நல்லோரை காத்திருக்கும் சூலி சூலி
பரமேஸ்வரி புவனேஸ்வரி ஜெகதீஸ்வரி
தாயேஸ்வரி மாயேஸ்வரி எமை ஆதரி

இருவர் : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி

குழு : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி

இருவர் : மன்னவன் உயிரும் சின்னவன் உயிரும்
காத்து நிற்கும் காரணி

குழு : ஓம்… ஓம்…

இருவர் : அன்றும் இன்றும் என்றும் எமக்கு
அன்னம் கொடுக்கும் பூரணி

குழு : ஓம்… ஓம்…

இருவர் : சூரியன் வந்து சந்திரன் வந்து
சுற்றித் திரிவது யாராலே
காரிருள் போல மேகம் திரண்டு
மாரியும் வந்தது யாராலே
உண்மை உணர்ந்திட புத்தியை நீ கொடு
உன்னை வணங்கிட பக்தியை நீ கொடு
அந்தரி சுந்தரி சௌந்தரியே

இருவர் : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி

குழு : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி

ஆண் : மஞ்சளில் உந்தன் கோலம் கொஞ்சுமே
முத்து மாரி உந்தன் பாதம் தஞ்சமே

குழு : ஓ…….ஓ…..ஓ…….ஓ…..
மஞ்சளில் உந்தன் கோலம் கொஞ்சுமே
முத்து மாரி உந்தன் பாதம் தஞ்சமே

ஆண் : எக்காலும் வாழும் முக்காலம் போற்றும்
வெக்காளியம்மன் அல்லவா

குழு : எக்காலும் வாழும் முக்காலம் போற்றும்
வெக்காளியம்மன் அல்லவா

இருவர் : குங்குமமே தந்திடுவோம்
மங்கலமே பொங்கிட வா

குழு : குங்குமமே தந்திடுவோம்
மங்கலமே பொங்கிட வா

இருவர் : பாரடி பாரடி பைரவியே பைரவியே

குழு : பைரவி பைரவி பைரவியே

இருவர் : துயர் தீரடி தீரடி அம்பிகையே

குழு : அம்பிகை அம்பிகை அம்பிகையே

இருவர் : கூறடி கூறடி அருள் மொழியே
அருள் மொழியே

குழு : நான்முக நாயகி நாயகியே

இருவர் : எமக்காரடி ஆரடி வழித்
துணையே வழித் துணையே

குழு : தீந்தமிழ் பாடிடும் உமையவளே

இருவர் : வஞ்சகரின் நெஞ்சமெல்லாம் நஞ்சிருக்கும் மஞ்சமம்மா
பிஞ்சு மனம் அஞ்சுதம்மா உன்னிடமே தஞ்சமம்மா
நாயகி நர்த்தகி நாலடி வான்மறை வாசகியே…
சந்ததி சாமளை சத்திய சாதரி சாம்பவியே……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here