Singer : K. S. Chithra
Music by : Ilayaraja
Female : Poonthendral…
Aahahaa…
Aahahaa… aahahaa…
Female : Poonthendral pogum paadhai
Pogalaam
Paadal ketkalaam
Vilaiyaadi paarkkalaam
Poonthendral pogum paadhai pogalaam
Paadal ketkalaam
Vilaiyaadi paarkkalaam
Female : Pani megam..mm
Tharum geetham..mm..
Malar cholai…ee
Tharum raagam..mm
Naalum naalum aanandham
Paadal ketkalaam vilaiyaadi paarkkalaam
Poonthendral…
Female : Siru siru malaigalil
Vizhugindra aruvigal
Isai yena olikkiradhu
Adhu surangalai pirikkiradhu
Sarigama surangalai pirikkiradhu
Female : Sandhana marangalil
Thazhuviya kaatrinil
Ilaigalum asaigiradhu
Adhu thaalatthil irukkiradhu
Thaka dhimi thaalatthil irukkiradhu
Female : Pachai malai engum indha
Paadal kettu
Panja varna pookkal kooda aadudhae
Idhu iyarkkai annai seedhanam
Adhu isaiyaai aanadhu
Idhai yaarum inge ketkalaam
Pudhu paadal paadalaam nisa nisa… pani pani…
Nisa nisa pani pani mapanisa nipamari
Female : Poonthendral pogum paadhai
Pogalaam
Paadal ketkalaam
Vilaiyaadi paarkkalaam
Female : Aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa…
Kani vitta marangalil ilam chittu kuruvigal
Koodugal punaigiradhu oru kudumbamum
Valargiradhu
Pala pala sugangalum malargiradhu
Iyarkkaiyin azhaginil ilamaiyum inimaiyum
Inaivadhu or azhagu adhil inaindhadhu
En manadhu
Dhinam dhinam vilaindhadhu pudhu uravu
Female : Vaanavillin jaalam kandaal
Mogam koodum
Ennam engum jaadai solli paadumae
Ingu konjum inbam aayiram
Manam polae aadalaam
Dhinam sorgam ingu kaanalaam
Pudhu paadal paadalaam nisa nisa… pani pani…
Nisa nisa pani pani mapanisa nipamari
Female : Poonthendral pogum paadhai
Pogalaam
Paadal ketkalaam
Vilaiyaadi paarkkalaam
Female : Pani megam..mm
Tharum geetham..mm..
Malar cholai…ee
Tharum raagam..mm
Naalum naalum aanandham
Paadal ketkalaam vilaiyaadi paarkkalaam
Poonthendral…hae… ae… ae…
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பூந்தென்றல்…
ஆஹஹா…….
ஆஹஹா… ஆஹஹா…
பெண் : பூந்தென்றல் போகும் பாதை
போகலாம்
பாடல் கேட்கலாம்
விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்
விளையாடிப் பார்க்கலாம்
பெண் : பனி மேகம்….ம்ம்….
தரும் கீதம்…..ம்ம்…..
மலர்ச் சோலை….ஈ…..
தரும் ராகம்….ம்ம்…..
நாளும் நாளும் ஆனந்தம்
பாடல் கேட்கலாம்
விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல்…
பெண் : சிறு சிறு மலைகளில்
விழுகின்ற அருவிகள்
இசை என ஒலிக்கிறது
அது சுரங்களை பிரிக்கிறது
ஸரிகம சுரங்களை பிரிக்கிறது
பெண் : சந்தன மரங்களில்
தழுவிய காற்றினில்
இலைகளும் அசைகிறது
அது தாளத்தில் இருக்கிறது
தகதிமி தாளத்தில் இருக்கிறது
பெண் : பச்சை மலை எங்கும் இந்தப்
பாடல் கேட்டு
பஞ்ச வர்ணப் பூக்கள் கூட ஆடுதே
இது இயற்கை அன்னை சீதனம்
அது இசையாய் ஆனது
இதை யாரும் இங்கு கேட்கலாம்
புதுப் பாடல் பாடலாம் நிஸ நிஸ… பநி பநி…
நிஸ நிஸ பநி பநி மபநிஸ நிபமரி
பெண் : பூந்தென்றல் போகும் பாதை
போகலாம்
பாடல் கேட்கலாம்
விளையாடிப் பார்க்கலாம்
பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…
கனி விட்ட மரங்களில் இளஞ்சிட்டுக் குருவிகள்
கூடுகள் புனைகிறது ஒரு குடும்பமும்
வளர்கிறது
பலப் பல சுகங்களும் மலர்கிறது
இயற்கையின் அழகினில்
இளமையும் இனிமையும்
இணைவது ஓர் அழகு
அதில் இணைந்தது என் மனது
தினம் தினம் விளைந்தது புது உறவு
பெண் : வானவில்லின் ஜாலம் கண்டால்
மோகம் கூடும்
எண்ணம் எங்கும் ஜாடை சொல்லிப் பாடுமே
இங்கு கொஞ்சும் இன்பம் ஆயிரம்
மனம் போலே ஆடலாம்
தினம் சொர்க்கம் இங்கு காணலாம்
புதுப் பாடல் பாடலாம் நிஸ நிஸ… பநி பநி…
நிஸ நிஸ பநி பநி மபநிஸ நிபமரி
பெண் : பூந்தென்றல் போகும் பாதை
போகலாம்
பாடல் கேட்கலாம்
விளையாடிப் பார்க்கலாம்
பெண் : பனி மேகம்….ம்ம்….
தரும் கீதம்…..ம்ம்…..
மலர்ச் சோலை….ஈ…..
தரும் ராகம்….ம்ம்…..
நாளும் நாளும் ஆனந்தம்
பாடல் கேட்கலாம் விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல்…ஹே… ஏ… ஏ…