Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Poonthaenil kalandhu
Ponvandu ezhundhu
Sangeedham padippadhenna
Thallaadi nadappadhenna

Female : Poonthaenil kalandhu
Ponvandu ezhundhu
Sangeedham padippadhenna
Thallaadi nadappadhenna

Female : Pon vanna yaeni ondru
Seidhu koduthaan
Enai valarthu vittaan

Female : Pogaatha melpadikku
Poga vaithaan
Kalai malara seidhaan

Female : Avan naan vaazha vendum endru
Naalthorum ninaithaan
Nandraaga oor idam thedi thandhaan
Avan ennai than dhinam ninaithaan
Nenjil ennodu kalandhu vittaan

Female : Poonthaenil kalandhu
Ponvandu ezhundhu
Sangeedham padippadhenna
Thallaadi nadappadhenna

Female : Maanikka mookkuthi
Sootti vittan
Naan mayangi nindren

Female : Meenakshi pol ennai
Jolikka vaithaan
Manam malarndhu nindren

Female : Per konda kaadhaliyai
Oorkola silaiyaai
Seeraaga thirumagal aakki vaithaan
Avan enakkul thandha mayakkam
Adhai eppodhum ninaikka vaithaan

Female : Poonthaenil kalandhu
Ponvandu ezhundhu
Sangeedham padippadhenna
Thallaadi nadappadhenna

Female : Kanmeedhu mai eduthu
Theetta sonnaan
Naan theetti konden

Female : Thaanakkaaga paattondru
Paada sonnaan
Naan paadi vaithaen

Female : Sendhoora ithazh thannil
Edhedho ezhuthi
Singaaram seidhadhu puriyavillai
Adhil enakkum oru mayakkam
Adhu yen endru theriyavillai

Female : Poonthaenil kalandhu
Ponvandu ezhundhu
Sangeedham padippadhenna
Thallaadi nadappadhenna
Aah….aaha… ahaha…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பெண் : பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பெண் : பொன் வண்ண ஏணி ஒன்று
செய்து கொடுத்தான்
எனை வளர்த்து விட்டான்

பெண் : போகாத மேல்படிப்புக்கு
போக வைத்தான்
கலை மலர செய்தான்

பெண் : அவன் நான் வாழ வேண்டும் என்று
நாள்தோறும் நினைத்தான்
நன்றாக ஓர் இடம் தேடி தந்தான்
அவன் என்னைத்தான் தினம் நினைத்தான்
நெஞ்சில் என்னோடு கலந்து விட்டான்

பெண் : பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பெண் : மாணிக்க மூக்குத்தி
சூட்டி விட்டான்
நான் மயங்கி நின்றேன்

பெண் : மீனாட்சி போல் என்னை
ஜொலிக்க வைத்தான்
மனம் மலர்ந்து நின்றேன்

பெண் : பேர் கொண்ட காதலியை
ஊர்கோல சிலையால்
சீராக திருமகள் ஆக்கி வைத்தான்
அவன் எனக்குள் தந்த மயக்கம்
அதை எப்போதும் நியிக்க வைத்தான்

பெண் : பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பெண் : கண்மீது மை எடுத்து
தீட்ட சொன்னான்
நான் தீட்டி கொண்டேன்

பெண் : தனக்காக பாட்டொன்று
பாட சொன்னான்
நான் பாடி வைத்தேன்

பெண் : செந்தூர இதழ் தன்னில்
ஏதேதோ எழுதி
சிங்காரம் செய்தது புரியவில்லை
அதில் எனக்கும் ஒரு மயக்கம்
அது ஏன் என்று தெரியவில்லை

பெண் : பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
ஆஹ்……ஆஹா….அஹஹா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here