Singers : T. M. Soundararajan,

P. Susheela and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Male : Poo vaiththa poovaikku
Pookkal sonthamaa
Female : Poovukkum thaenukkum
Poo sinthum bodhaikkum
Eekkal sonthamaa

Male : I love you
Female : I love you
Male : I love love you

Female : Poo vaiththa poovaikku
Pookkal sonthamaa
Male : Poovukkum thaenukkum
Poo sinthum bodhaikkum
Eekkal sonthamaa

Female : I love you
Male : I love you
Female : I love love you

Male : {Muththu simizhaa
Vanna thaththai kuralaa
Un velli thandai osai enna
Pillaai thamizhaa} (2)

Female : Kan pattu
Male : Aaahaa
Female : Ungal kai pattu
Male : Ohoo
Female : Ingu kattu vittu sirippadhu
Thamizh paattu

Female : Kan pattu
Ungal kai pattu
Ingu kattu vittu sirippadhu
Thamizh paattu

Male & Female : I love you
I love you
I love love you

Male : Pachchai vaazhai marathukku
Selai katti pottu vaitha panthalo
Pasum paalo pazhathudan
Thaen kalanthu kanni
Vaitha pongaloo

Female : Sonnaal therivadhillai
Edhuvum
Male : Aahaa
Female : Adhai unnaal therinthu
Kolla udhavum
Male : Hoo

Female : Sonnaal therivadhillai
Edhuvum
Adhai unnaal therinthu
Kolla udhavum
Kanda pinnaal eduthu
Solla mudiyum

Male & Female : I love you
I love you
I love love you

Male : {Palli kanakku konjam
Solli pazhakku
Nee illaiyendraal naan thoduppen
Kaadhal vazhakku} (2)

Female : Podungal
Male : Aahaa
Female : Koondil yerungal
Male : Yae

Female : Podungal
Koondil yerungal
Ungal pon manathai
Saatchi vaithu vettri kollungal

Male & Female : I love you
I love you
I love love you

Male : Poonthottam mella vanthu
Kannadithu kai kodukkum jaalamo
Adhu kaattum jaadai enna
Thaali kattum podhadikkum melamo

Female : Nandra irukkudhintha uvamai
Male : Ohoo
Female : Intha pennae unadhu
Sontha udamai
Male : Hohohoho

Female : Nandra irukkudhintha uvamai
Intha pennae unadhu
Sontha udamai
Ini ellaam pazhaguvadhu urimai

Male & Female :
Poo vaiththa poovaikku
Pookkal sonthamaa
Poovukkum thaenukkum
Poo sinthum bodhaikkum
Eekkal sonthamaa

Male & Female : I love you
I love you
I love love you

Male & Female : I love you
I love you
I love love you

பாடகர்கள் : பி. சுஷீலா,
டி. எம். சௌந்தரராஜன் மற்றும்
எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

ஆண் : பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
பெண் : பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா

ஆண் : ஐ லவ் யு
பெண் : ஐ லவ் யு
ஆண் : ஐ லவ் லவ் யு

பெண் : பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
ஆண் : பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா

ஆண் : ஐ லவ் யு
பெண் : ஐ லவ் யு
ஆண் : ஐ லவ் லவ் யு

ஆண் : {முத்து சிமிழா
வண்ண தத்தை குரலா
உன் வெள்ளி தண்டை
ஓசை என்ன
பிள்ளாய் தமிழா} (2)

பெண் : கண் பட்டு
ஆண் : ஆஹா
பெண் : உங்கள் கை பட்டு
ஆண் : ஒஹோ
பெண் : இங்கு கட்டு விட்டு சிரிப்பது
தமிழ் பாட்டு

பெண் : கண் பட்டு
உங்கள் கை பட்டு
இங்கு கட்டு விட்டு சிரிப்பது
தமிழ் பாட்டு

ஆண் மற்றும் பெண் :
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு

ஆண் : பச்சை வாழை மரத்துக்கு
சேலை கட்டி போட்டு
வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன்
தேன் கலந்து கன்னி
வைத்த பொங்கலோ

பெண் : சொன்னால் தெரிவதில்லை
எதுவும்
ஆண் : ஆஹா
பெண் : அதை உன்னால் தெரிந்து
கொள்ள உதவும்
ஆண் : ஹோ

பெண் : சொன்னால் தெரிவதில்லை
எதுவும்
அதை உன்னால் தெரிந்து
கொள்ள உதவும்
கண்ட பின்னால் எடுத்து
சொல்ல முடியும்

ஆண் மற்றும் பெண் :
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு

ஆண் : {பள்ளி கணக்கு கொஞ்சம்
சொல்லி பழக்கு
நீ இல்லையென்றால்
நான் தொடுப்பேன் காதல் வழக்கு} (2)

பெண் : போடுங்கள்
ஆண் : ஆஹா
பெண் : கூண்டில் ஏறுங்கள்
ஆண் : யே

பெண் : போடுங்கள்
கூண்டில் ஏற்றுங்கள்
உங்கள் பொன் மனதை
சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்

ஆண் மற்றும் பெண் :
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு

ஆண் : பூந்தோட்டம் மெல்ல வந்து
கண்ணடித்து கை கொடுக்கும் ஜாலமோ
அது காட்டும் ஜாடை என்ன
தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ

பெண் : நன்றா இருக்குதிந்த உவமை
ஆண் : ஒஹோ
பெண் : இந்த பெண்னே உனது
சொந்த உடமை
ஆண் : ஹோ ஹோ

பெண் : நன்றா இருக்குதிந்த உவமை
இந்த பெண்னே உனது
சொந்த உடமை
இனி எல்லாம் பழகுவது உரிமை

ஆண் மற்றும் பெண் :
பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா

ஆண் மற்றும் பெண் :
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here