Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : La la la la la la laa laa laa
La la la la la la laa laa laa
La la la la la la la laa laa laa laa laa

Female : { Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa } (2)
Vaasal paarthu kangal poothu
Paarthu nindren vaa

Female : Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa

Female : Azhaipu mani endha veetil ketaalum
Oodi naan vanthu paarpen
Thendral envaasal theendavae illai
Kannil vennerai vaarpen
Kangalum oointhathu
Jeevanum theinthathu

Female : Jeeva deepangal ooyum neram
Neeyum neiyaaga vanthaai
Intha kanneril sogam illai indru
Aanantham thanthaai
Pethi yendraalum neeyum en thaai

Female : Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa

Chorous : Aah … aah … aah … aah … aah … aaa … aah

Female : Kaalam karaindhaalum kolam sithaindhaalum
Paasam velukaathu maanae
Neeril kulidhaalum nerupil eridhaalum
Thangam karukaathu thaayae
Pon mugam paarkiren athil
En mugam paarkiren

Female : Intha pon maanai paarthukondae
Sendru naan sera vendum
Meendum jenmangal maarumpothum
Naan un magalaaga vendum
Paasa raagangal paada vendum

Female : Poovae poo chooda vaa
{ Enthan nenjil paal vaarka vaa } (2)

 

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ல ல ல ல ல
ல லா லா லா ல ல
ல ல ல ல லா லா லா
ல ல ல ல ல ல ல
லா லா லா லா

பெண் : { பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து பாா்த்து நின்றேன்
வா

பெண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா

பெண் : அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன் கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது

பெண் : ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில்
சோகமில்லை இன்று
ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்

பெண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா

குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ……

பெண் : காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே பொன்முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்

பெண் : இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே சென்று
நான் சேர வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

பெண் : பூவே பூச்சூடவா
{ எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here