Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram
Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram
Poondhaegam naan yaendhum
Ponnodam dhaan
Un mogam en nenjin boopaalam dhaan

Male : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram

Female : Dhaegathilae thandha mogathilae
Vandha vaegathil vilaindhadhenna

Male : Naerathilae vandha baarathilae
Idhazh eerathil malarndhadhenna

Female : Thotrathilae manam thotradhilae
Thookkam kettu unai paarthadhilae

Male : Poo maalai pol ennai
Nee serum pon maalai
Naan kaanbaen aanandham

Female : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram

Male : Sorgathilae undhan pakkathilae
Thandha sondhathil sugam padithaen

Female : Koodathilae mani maadathilae
Thandha paadathil enai izhandhen

Male : Koondhal ennum oru veettukkullae
Koodu kattum isai poonguyilae

Female : Poo maeni noolaanaen
Poo indru aalaanaen
Paalaadai pol aanaen

Male : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram

Female : Poondhaegam naan yaendhum
Ponnodam dhaan

Male : Un mogam en nenjin boopaalam dhaan

Female : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram

Male : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம்தான்
உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்

ஆண் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

பெண் : தேகத்திலே தந்த மோகத்திலே
வந்த வேகத்தில் விளைந்ததென்ன

ஆண் : நேரத்திலே வந்த பாரத்திலே
இதழ் ஈரத்தில் மலர்ந்ததென்ன

பெண் : தோற்றத்திலே மனம் தோற்றதிலே
தூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே

ஆண் : பூ மாலை போல் என்னை
நீ சேரும் பொன் மாலை
நான் காண்பேன் ஆனந்தம்

பெண் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

ஆண் : சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே
தந்த சொந்தத்தில் சுகம் படித்தேன்

பெண் : கூடத்திலே மணி மாடத்திலே
தந்த பாடத்தில் எனை இழந்தேன்

ஆண் : கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே
கூடு கட்டும் இசைப் பூங்குயிலே

பெண் : பூ மேனி நூலானேன்
பூ இன்று ஆளானேன்
பாலாடை போல் ஆனேன்

ஆண் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

பெண் : பூந்தேகம் நான் ஏந்தும்
பொன்னோடம்தான்

ஆண் : உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்

பெண் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

ஆண் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here