Singer : Vijay Yesudas and Vinaitha

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : J. Francis Kiruba

Male : Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi
En devathai….oo….oo…..oo…..

Male : Idhu maayamo sol
En bhoomiyil naanillaiyae
Thedi thedi kangal theduthe
Veru bhoomi seiyyath thonuthae
Kodi kodi minnal ennilae
Poop pookkuthae

Male : Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi

Chorus : ………………

Female : Aayiram naadagam
Aadinaai neeyadaa
Maayamaai kaayangal seigiraai

Male : Naadagam aadavae medaiyum neeyadi
Kaattrilae oviyam varaigiraai
Female : Theeraatha poigal pesiyae
Thithikkum imsai seigiraai….

Male : Paarvaiyil kathigal veesi nee
Nogaamal ennai kolgiraai
Female : Adhanaalae naanum ingae
Thoongaatha kadalum aanaen
Thaalaatta neeyum varuvaai
Alaiyaai alaiyaai

Male : Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi

Male : Chithirai maargazhi saernthatho muthamae
Seiyyavaa sellavae unnidam
Female : Haa yaaridam ketkiraai
Naanillai ennidam
Vaanavil aadalaai aaduthae

Male : Neerindri vaanil vaazhnthidum oo….
Vin meengal mannil kaangiraen
Female : Megathil meyum vennilaa
Aa….haa…thegaththil vanthu kaayuthae

Male : Urangaatha iravugal melae
Adangaatha kanavugalaalae
Mithanthidum panithuli polae
Pudhithaai piranthaen

Female : Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram
Male : Nindrenadi
Female : Pothum pothum endra pothum
Theeyil vaazhum
Male : Dheva bodhai thanthaaiyadi

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் வினைதா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : ஜே. பிரான்சிஸ் கிருபா

ஆண் : பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
என் தேவதை…….ஓ ஓ ஓ…..

ஆண் : இது மாயமோ சொல்
என் பூமியில் நானில்லையே
தேடி தேடி கண்கள் தேடுதே
வேறு பூமி செய்யத்தோனுதே
கோடி கோடி மின்னல் என்னிலே
பூப் பூக்குதே

ஆண் : பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி

குழு : ……………………

பெண் : ஆயிரம் நாடகம்
ஆடினாய் நீயடா
மாயமாய் காயங்கள் செய்கிறாய்

ஆண் : நாடகம் ஆடவே மேடையும் நீயடி
காற்றிலே ஓவியம் வரைகிறாய்
பெண் : தீராத பொய்கள் பேசியே
தித்திக்கும் இம்சை செய்கிறாய்….

ஆண் : பார்வையில் கத்திகள் வீசி நீ
நோகாமல் என்னை கொள்கிறாய்
பெண் : அதனாலே நானும் இங்கே
தூங்காத கடலும் ஆனேன்
தாலாட்ட நீயும் வருவாய்
அலையாய் அலையாய்

ஆண் : பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி

ஆண் : சித்திரை மார்கழி சேர்ந்ததோ முத்தமே
செய்யவா செல்லவே உன்னிடம்
பெண் : ஹா யாரிடம் கேட்கிறாய்
நானில்லை என்னிடம்
வானவில் ஆடலாய் ஆடுதே

ஆண் : நீரின்றி வானில் வாழ்ந்திடும் ஓ….
விண் மீன்கள் மண்ணில் காண்கிறேன்
பெண் : மேகத்தில் மேயும் வெண்ணிலா
அ….ஹா….தேகத்தில் வந்து காயுதே…

ஆண் : உறங்காத இரவுகள் மேலே
அடங்காத கனவுகளாலே
மிதந்திடும் பனித்துளி போலே
புதிதாய் பிறந்தேன்

பெண் : பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம்
ஆண் : நின்றேனடி
பெண் : போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும்
ஆண் : தேவ போதை தந்தாயடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here