Singers : Kamal Haasan and Vijay Narain

Music Director : Govind Vasantha

Lyricist : Uma Devi

Male : Poren naan poren
Verum koodaa poren
Poratha kodunkaalam
Vazhi naan poren

Male : Odi aadi velaiyanda
Oora pirinjen
Paatan pootan katti
Kaatha veeta pirinjen

Male : Yei poren naan poren
Verum koodaa poren
Poratha kodunkaalam
Vazhi naan

Male : Kaalame sari thaana
Kann ellam katchi pizhai thaana
Naan senja paavam than
Edhu poi vaazhvu soozhuthu
Paal tharum thaai madiya
Pangida alaiyum sonthangal
Naalaigal ellame
Niraasai aanathe

Male : Noolodu aadum kaathadi
Nool arunthu ponene
Verodu saayum poo marama
Vedikai aanene
Nadu kaatil odum aaru pol
Kaanaama porene
Kan kootil vaala paravai ivan
Agathi aanen

Male : Poren naan poren
Verum koodaa poren
Poratha kodunkaalam poren

Male : Edhai solli naan
Enai thetruven
Intha oolvinai thanai maatruven
Sathi aadidum irul paadhaiyil
Oli yettruven
Indru pogiren endru meeluven
Iraivaasalai vandhu seruven
Sontha kaatrile enai meetida
Meiyaana oar karam theduven
Oorodu sernthe vaazhatha
Vaazhvingu vaazhveno
Neerodu sernthe pogadha
Neer kumili naan

Male : Poi vaa kalangaathe
Kalangaathe magane
Unakaaga kaathu irupom
Poi nee vaa
Poi vaa varamal irukathe magane
Unakaaga kaathu irupom
Poi nee vaa

பாடகர்கள் : உமா தேவி கமல்ஹாசன் மற்றும் விஜய் நாராயண்

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : உமா தேவி

ஆண் : போறேன் நான் போறேன்
வெறும் கூடா போறேன்
போறாத கொடுங்காலம்
வழி நான் போறேன்

ஆண் : ஓடி ஆடி விளையாண்ட
ஊரை பிரிஞ்சேன்
பாட்டன் பூட்டன் கட்டிக்காத்த
வீட்டை பிரிஞ்சேன்

ஆண் : ஏய் போறேன் நான் போறேன்
வெறும் கூடா போறேன்
போறாத கொடுங்காலம்
வழி நான்

ஆண் : காலமே சரி தானா
கண் எல்லாம் காட்சி பிழை தானா
நான் செஞ்ச பாவம் தான்
எது பொய் வாழ்வு சூழுது
பால் தரும் தாய் மடியா
பங்கிட அலையும் சொந்தங்கள்
நாளைகள் எல்லாமே
நிராசை ஆனதே

ஆண் : நூலோடு ஆடும் காத்தாடி
நூல் அறுந்து போனேனே
வேரோடு சாயும் பூ மரமா
வேடிக்கை ஆனேனே
நடு காட்டில் ஓடும் ஆறு போல்
காணாம போறேனே
கண் கூட்டில் வாழா பறவை இவன்
அகதி ஆனேன்

ஆண் : போறேன் நான் போறேன்
வெறும் கூடா போறேன்
போறாத கொடுங்காலம்

ஆண் : எதை சொல்லி நான்
எனை தேற்றுவேன்
இந்த ஊழ்வினை தனை மாற்றுவேன்
சதி ஆடிடும் இருள் பாதையில்
ஒளி ஏற்றுவேன்
இன்று போகிறேன் என்று மீளுவேன்
இறைவாசலை வந்து சேருவேன்
சொந்த காற்றிலே என்னை மீட்டிட
மெய்யான ஓர் கரம் தேடுவேன்
ஊரோடு சேர்ந்தே வாழாத
வாழ்விங்கு வாழ்வேனோ
நீரோடு சேர்ந்தே போகாத
நீர் குமிழி நான்

ஆண் : போய் வா
கலங்காதே காலங்காதே மகனே
உனக்காக காத்து இருப்போம்
போய் நீ வா
போய் வா வராமல் இருக்காதே
மகனே உனக்காக காத்து இருப்போம்
போய் நீ வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here