Singer : P. Susheela

Music by : G. Devarajan

Lyrics by : Kannadasan

Male : Pudhu mugamae siru madhu kudamae
Naan purinthu kondaen
Oru anupavamae anupavamae

Female : Ezhil mugamae ilamathi mugamae
Un idhayaththil vizhunthathu
En mugamae en mugamae

Male : Pudhu mugamae siru madhu kudamae
Naan purinthu kondaen
Oru anupavamae anupavamae

Male : Kaalgalin azhaginai kavingar kandaal
Oru kaaviyam pirakkum thamizhinilae
Female : Kaaviyam piranthu laabamillai
Un kaigal sollattum kavithaigalai
Kaantha….aaa…..kaanthaa…..aa…..

Male : Sangu muzhangidum kovililae
Adhu vanthathu eppadi meaniyilae
Female : Kandathillai idhai mazhalaiyilae
Idhu kaniyaai kaninthathu paruvaththilae
Dheepa….aaa…dheepa….aaa…..

Male : Pudhu mugamae siru madhu kudamae
Naan purinthu kondaen
Oru anupavamae anupavamae

Female : Ezhil mugamae ilamathi mugamae
Un idhayaththil vizhunthathu
En mugamae en mugamae

Female : Oruvarum idhuvarai thottathillai
Adhil oru muththam idhuvarai pattathillai
Male : Kaayam padaathathu un idhazhaalae
Adhai kandathum purinthathu en manamae
Dheepa….aaa…dheepa….aaa…..

Female : Kaayam padaa idhazh kaaigindrathu
Unai kandathumthaan indru kanigindrathu
Male : Kanigindra idhazhukku ondru solvaen
Adhai kalyaanam aanathum kandu kolavaen
Female : Kaantha….aaa…..kaanthaa…..aa…..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன்
ஒரு அனுபவமே அனுபவமே

பெண் : எழில் முகமே இளமதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது
என் முகமே என் முகமே

ஆண் : புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன்
ஒரு அனுபவமே அனுபவமே

ஆண் : கால்களின் அழகினை கவிஞர் கண்டால்
ஒரு காவியம் பிறக்கும் தமிழினிலே
பெண் : காவியம் பிறந்து லாபமில்லை
உன் கைகள் சொல்லட்டும் கவிதைகளை
காந்தா…….ஆஅ…..காந்தா…….ஆஆ…..

ஆண் : சங்கு முழங்கிடும் கோவிலிலே அது
வந்தது எப்படி மேனியிலே
பெண் : கண்டதில்லை இதை மழலையிலே
இது கனியாய் கனிந்தது பருவத்திலே
தீபா…….ஆஅ….. தீபா…….ஆஆ…..

ஆண் : புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன்
ஒரு அனுபவமே அனுபவமே

பெண் : எழில் முகமே இளமதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது
என் முகமே என் முகமே

பெண் : ஒருவரும் இதுவரை தொட்டதில்லை
அதில் ஒரு முத்தம் இதுவரை பட்டதில்லை
ஆண் : காயம் படாதது உன் இதழே
அதை கண்டதும் புரிந்தது என் மனமே
தீபா…….ஆஅ….. தீபா…….ஆஆ…..

பெண் : காயம் படா இதழ் காய்கின்றது
உனை கண்டதும்தான் இன்று கனிகின்றது
ஆண் : கனிகின்ற இதழுக்கு ஒன்று சொல்வேன்
அதை கல்யாணம் ஆனதும் கண்டு கொள்வேன்
பெண் : காந்தா…….ஆஅ…..காந்தா…….ஆஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here