Singer : Vani Jayaraman

Music by : M. S. Vishwanathan

Chorus : Puratchi kavinjar kavidhai nadaiyae…
Pongi perugum gangai nadhiyae…
Pennin perumai paesum azhagae…
Pudhumai pennae varuga varuga

Chorus : Aa haa haa haa
Aa haa haa haa
Aa….aa…..aa……aa…..

Female : Pudhumai pengal arivu kangal
Pirandha naattin sirandha selvam
Endrae naan vaazhuvom
Ilamai kaadhal urimai paadal
Irandum engal inathil undu
Endrae naan paaduvom

Female : Pudhumai pengal arivu kangal
Pirandha naattin sirandha selvam
Endrae naan vaazhuvom
Ilamai kaadhal urimai paadal
Irandum engal inathil undu
Endrae naan paaduvom
Anbu raajaangam ingae kaanuvom
Angu ellorum ondraai vaazhuvom

Chorus : Anbu raajaangam ingae kaanuvom
Angu ellorum ondraai vaazhuvom

Female : {Acham endrum naanam endrum
Adakki vaithaargal
Aangal nammai aala thittam
Theetti vaithaargal} (2)

Female : Theemai thannai ennum podhu
Acham kollungal
Paavam vandhu saerum podhu
Vetkkam kollungal

Female : Pudhu panpaattai konjam keladi
Idhai pan paadi sonnaan bhaarathi

Chorus : Pudhu panpaattai konjam keladi
Idhai pan paadi sonnaan bhaarathi

Female : {Kaasukkaaga maalai soottum
Izhindha ullangal
Kannil pattaal acham indri
Vilangu poottungal} (2)

Female : Kaalam paarthu thaamae thammai
Maattri kollattum
Kaadhal anbu thyaagam ellaam
Kattru kollattum

Female : Indha kalyaana sandhai naattilae
Enna kachaeri thaevai veettilae

Chorus : Indha kalyaana sandhai naattilae
Enna kachaeri thaevai veettilae

Female : Veettukkullae vaazhum pennai
Adaithu vaithaargal
Yaettai thottu paarppadhellaam
Paavam endraargal
Pengal vandhaargal
Naalai engal kaalam endru
Solli thandhaargal

Chorus : Ini ellorrukkum ellaam aagalaam
Ingu boologa sorgam kaanalaam

Female : Pudhumai pengal arivu kangal
Pirandha naattin sirandha selvam
Endrae naan vaazhuvom
Ilamai kaadhal urimai paadal
Irandum engal inathil undu
Endrae naan paaduvom

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : புரட்சி கவிஞர் கவிதை நடையே…..
பொங்கி பெருகும் கங்கை நதியே…..
பெண்ணின் பெருமை பேசும் அழகே……
புதுமை பெண்ணே வருக வருக……

குழு : ஆ ஹா ஹா ஹா
ஆ ஹா ஹா ஹா
ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……

பெண் : புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்

பெண் : புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்
அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம்
அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்

குழு : அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம்
அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்

பெண் : {அச்சம் என்றும் நாணம் என்றும்
அடக்கி வைத்தார்கள்
ஆண்கள் நம்மை ஆள திட்டம்
தீட்டி வைத்தார்கள்} (2)

பெண் : தீமை தன்னை எண்ணும் போது
அச்சம் கொள்ளுங்கள்
பாவம் வந்து சேரும் போது
வெட்கம் கொள்ளுங்கள்

பெண் : புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி
இதை பண் பாடி சொன்னான் பாரதி

குழு : புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி
இதை பண் பாடி சொன்னான் பாரதி

பெண் : {காசுக்காக மாலை சூட்டும்
இழிந்த உள்ளங்கள்
கண்ணில் பட்டால் அச்சமின்றி
விலங்கு பூட்டுங்கள்} (2)

பெண் : காலம் பார்த்து தாமே தம்மை
மாற்றிக் கொள்ளட்டும்
காதல் அன்பு தியாகம் எல்லாம்
கற்றுக்கொள்ளட்டும்

பெண் : இந்த கல்யாண சந்தை நாட்டிலே
என்ன கச்சேரி தேவை வீட்டிலே

குழு : இந்த கல்யாண சந்தை நாட்டிலே
என்ன கச்சேரி தேவை வீட்டிலே

பெண் : வீட்டுக்குள்ளே வாழும் பெண்ணை
அடைத்து வைத்தார்கள்
ஏட்டை தொட்டு பார்ப்பதெல்லாம்
பாவம் என்றார்கள்
நாட்டை இன்று ஆள்வதற்கு
பெண்கள் வந்தார்கள்
நாளை எங்கள் காலம் என்று
சொல்லித் தந்தார்கள்

குழு : இனி எல்லோர்க்கும் எல்லாம் ஆகலாம்
இது பூலோக சொர்க்கம் காணலாம்

பெண் : புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here