Singer : P. Susheela

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female : Pullainga perulathaan
Thangam vairam irukkuthu
Koozhu kooda kidaikkaama
Enga vayiru thavikkuthu

Female : Pullainga perulathaan
Thangam vairam irukkuthu
Koozhu kooda kidaikkaama
Enga vayiru thavikkuthu

Female : Aduppathu eriyavilla
Jaan vayiru eriyuthammaa
Aduppathu eriyavilla
Jaan vayiru eriyuthammaa
Kanji kooda kaaichchi vaikka vithiyillaa
Ennai pinju mugangal paaththaakka
Azhuvaene mella aa….aa…

Female : Vaanamennum thattu niraiya
Natchaththira sottru parukkai
Vaanamennum thattu niraiya
Natchaththira sottru parukkai

Female : Angum ingum kotti kidakka
Ammaammaa enga porukka
Angum ingum kotti kidakka
Ammaammaa enga porukka

Female : Nilavinai paarppatharkku
Maambazham pol irukkuthu
Pasiyilae parippatharkku
Ettaamal yaeikkirathu

Female : Kanji kooda kaaichchi vaikka vithiyillaa
Ennai pinju mugangal paaththaakka
Azhuvaene mella aa….aa…aa….aa…

Female : Mannai padakkaiyilae
Medendrum pallamendrum
Mannai padakkaiyilae
Medendrum pallamendrum

Female : Piriththitta aandavanae
Unnai naan ketkindraen
Piriththitta aandavanae
Unnai naan ketkindraen

Female : Manithanai padaikkaiyilae
Meendum yaen maedu pallam
Yaezhai naangal vaaduvathil
Unakkenna aananthan

Female : Kanji kooda kaaichchi vaikka vithiyillaa
Ennai pinju mugangal paaththaakka
Azhuvaene mella

Female : Pullainga perulathaan
Thangam vairam irukkuthu
Koozhu kooda kidaikkaama
Enga vayiru thavikkuthu
Aa….aa…aa….aa…

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : புள்ளைங்க பேருலதான்
தங்கம் வைரம் இருக்குது
கூழு கூட கிடைக்காம
எங்க வயிறு தவிக்குது

பெண் : புள்ளைங்க பேருலதான்
தங்கம் வைரம் இருக்குது
கூழு கூட கிடைக்காம
எங்க வயிறு தவிக்குது

பெண் : அடுப்பது எரியவில்ல
ஜாண் வயிறு எரியுதம்மா
அடுப்பது எரியவில்ல
ஜாண் வயிறு எரியுதம்மா
கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா
என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க
அழுவேனே மெல்ல ஆ…ஆ…

பெண் : வானமென்னும் தட்டு நிறைய
நட்சத்திர சோற்றுப் பருக்கை
வானமென்னும் தட்டு நிறைய
நட்சத்திர சோற்றுப் பருக்கை

பெண் : அங்கும் இங்கும் கொட்டி கிடக்க
அம்மம்மா எங்க பொறுக்க
அங்கும் இங்கும் கொட்டி கிடக்க
அம்மம்மா எங்க பொறுக்க

பெண் : நிலவினை பார்ப்பதற்கு
மாம்பழம் போல் இருக்குது
பசியிலே பறிப்பதற்கு
எட்டாமல் ஏய்க்கிறது

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா
என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க
அழுவேனே மெல்ல ஆ…ஆ…ஆ…ஆ…

பெண் : மண்ணை படைக்கையிலே
மேடென்றும் பள்ளமென்றும்
மண்ணை படைக்கையிலே
மேடென்றும் பள்ளமென்றும்

பெண் : பிரித்திட்ட ஆண்டவனே
உன்னை நான் கேட்கின்றேன்
பிரித்திட்ட ஆண்டவனே
உன்னை நான் கேட்கின்றேன்

பெண் : மனிதனை படைக்கையிலே
மீண்டும் ஏன் மேடு பள்ளம்
ஏழை நாங்கள் வாடுவதில்
உனக்கென்ன ஆனந்தம்

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா
என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க
அழுவேனே மெல்ல

பெண் : புள்ளைங்க பேருலதான்
தங்கம் வைரம் இருக்குது
கூழு கூட கிடைக்காம
எங்க வயிறு தவிக்குது…
ஆ….ஆ….ஆ….ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here